சினிமா

விஜய் வர்மாவுடன் காதலா?- தமன்னா விளக்கம்!

Published

on

நடிகர் விஜய் வர்மாவுடன் காதல் என்ற செய்திக்கு நடிகை தமன்னா விளக்கம் கொடுத்துள்ளார்.

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரக் கூடிய தமன்னா தற்பொழுது பாலிவுட் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தற்பொழுது ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார். நடிகர் விஜய் வர்மாவுடன் ஒரு படத்தில் இணைந்து நடித்துள்ளார் தமன்னா. இப்போது அவருக்கும், விஜய் வர்மாவுக்கும் காதல் எனவும் அவருடன் இருக்கும்படியான புகைப்படங்களும் வெளியாகி இருக்கிறது. \

இதற்கு தமன்னா கொடுத்திருக்கும் விளக்கம், ” விஜய் வர்மாவுடன் ஒரு படம் மட்டுமே நடித்திருக்கிறேன். அதற்குள் அவருடன் காதல் என்று வரும் செய்தியை எப்படி எடுத்துக் கொள்வது எனத் தெரியவில்லை. இதற்கு விளக்கம் கொடுக்க வேண்டும் என்றும் நான் நினைக்கவில்லை. நடிகர்களை விடவும் நடிகைகளே இது போன்ற திருமண வதந்திகளில் அதிகம் சிக்குகின்றனர். அதற்கு என்ன காரணம் என்பதும் எனக்கு புரியவில்லை.

அதனால், நான் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு பலமுறை திருமணம் செய்து கொண்டது போல உணர்கிறேன். டாக்டர், தொழிலதிபர் என எனக்கு பலருடன் திருமணம் செய்து வைத்துள்ளனர். எனக்கு உண்மையாகவே திருமணம் நடந்தாலும் அதை ரசிகர்கள் நம்புவார்களா என தெரியவில்லை” எனக்கு கூறியுள்ளார் தமன்னா.

seithichurul

Trending

Exit mobile version