இந்தியா

மக்களவைத் தேர்தலில் அதிக வாக்குப்பதிவு நடைபெற்ற மாநிலம் எது?

Published

on

2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் இமாசல பிரதேசத்தில் தான் அதிகப்படியான வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு முதல் முறையாக 1951-9152-ல் மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. அப்போது தான் அதிகளவில் வாக்குப்பதிவு நடைபெற்றதாக தகவல்கள் கூறுகின்றன.

அதன் பிறகு முதல் முறையாக இமாசல பிரதேசம் மாநிலத்தில் மட்டும் மக்களவைத் தேர்தலில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு 71.73 சதவீத வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

2019–ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது. 543 தொகுதிகள் கொண்ட மக்களவைத் தேர்தலில் வேலூரை தவிர்த்து மீதம் உள்ள 542 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.

இந்த 17-வது மக்களவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே 23-ம் தேதி நடைபெற உள்ளது. இதை அடுத்து இந்தியாவின் அடுத்த 5 ஆண்டு காலத்திற்கு ஆட்சி செய்யும் பிரதமர் யார் என்பது முடிவாகும்.

seithichurul

Trending

Exit mobile version