வணிகம்

2020-ம் ஆண்டு உங்கள் சம்பள உயர்வு சரியும்; அதிர்ச்சி அளிக்கும் ரிப்போர்ட்!

Published

on

2020-ம் ஆண்டு இந்திய ஊழியர்களின் சம்பள உயர்வு விகிதம், 10 வருடங்கள் இல்லாத அளவிற்குச் சரிந்து சராசரியாக 9.1 சதவீதமாக இருக்கும் என்று ஏயான் சம்பள உயர்வு ஆய்வு முடிவுகள் 2020 தெரிவித்துள்ளது.

ஆய்வு முடிவுகளின் படி இந்தியர்களின் சம்பள உயர்வு விகிதம் ஒவ்வொரு ஆண்டும் 0.20 சதவீதம் சரிந்து 2019-ம் ஆண்டு 9.3 சதவீதமாக இருந்தது. 2020-ம் ஆண்டு அது 0.20 சதவீதம் சரிந்து சராசரியாக 9.1 சதவீதமாகச் சம்பள உயர்வு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், ஆசிய பசபிக் பகுதிகளில் இந்தியர்களின் சம்பள உயர்வு தான் அதிகபட்சமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு இந்தியாவிலிருந்து செயல்பட்டு வரும் 1000 நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் வெளியாகியுள்ளது.

அதிகபட்சமாக இ-காமர்ஸ் துறையில் 10 சதவீதம் வரை சம்பள உயர்வும், குறைந்தபட்சமாகப் போக்குவரத்துத் துறையில் 7.6 சதவீதமாகச் சம்பள உயர்வு இருக்குமாம்.

ஐடி துறையில் சம்பள உயர்வு 9.6 சதவீதமும், ஐடி சேவைகள் துறையில் 9.5 சதவீதமாக சம்பள இயர்வு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending

Exit mobile version