சினிமா செய்திகள்

12 மணி நேரத்திலே தமிழ் ராக்கர்ஸில் வெளியான பேட்ட, விஸ்வாசம்!

Published

on

இணையதளங்களில் திருட்டுத் தனமாக படங்களை வெளியிடக் கூடாது என ஒவ்வொரு முறையும் ஐகோர்ட்டில் தயாரிப்பாளர்கள் உத்தரவு பெற்றாலும், தமிழ் ராக்கர்ஸ் அதையெல்லாம் கண்டுகொள்வதே இல்லை.

நேற்று வெளியான பேட்ட மற்றும் விஸ்வாசம் படங்கள் வெளியான 12 மணி நேரத்திலேயே தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியாகி சன் பிக்சர்ஸ் மற்றும் சத்யஜோதி பிலிம்ஸுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

ரசிகர்கள் கொண்டாட்டம் தியேட்டர்களில் காதை கிழித்த நிலையிலும், நல்ல தரமான தியேட்டர் பிரின்ட் வெளியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், டிசம்பர் 21ம் தேதி வெளியான விஷ்ணு விஷாலின் சிலுக்குவார்பட்டி சிங்கம் திரைப்படம் ஹெச்டி பிரின்ட்டிலும் வெளியாகிவிட்டதாம்.

விரைவில், கனா, சீதக்காதி, அடங்கமறு படங்களும் ஓரிரு நாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக விஜய்யின் சர்கார், சண்டக்கோழி2 படங்களின் ஹெச்டி பிரின்ட்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆன்லைன் பைரசியை தடுக்க வழி தெரியாமல் சினிமா உலகம் திக்குமுக்காடி வருகிறது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version