தமிழ்நாடு

முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு!

Published

on

பள்ளிகளில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து முக்கிய சுற்றறிக்கை ஒன்றை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் தொடக்கக் கல்வி இயக்ககம் அனுப்ப்பியுள்ளது. அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

அனைத்து பள்ளிகளிலும் பெண் குழந்தைகளை பாதுகாக்க குழு அமைக்க வேண்டும். இந்த குழுவில் மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், பெண் காவல்துறை அலுவலர், பெண் மனநல மருத்துவர் ஆகியோர் இடம்பெற வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார் பெட்டி அமைக்கப்பட வேண்டும்.

பள்ளிகளில் மாணவிகளுக்கு எந்தவித பாலியல் தொந்தரவுகளும் சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களால் ஏற்படக்கூடாது என்றும் அதனை முன்கூட்டியே தடுக்கும் வகையில் இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

பள்ளிகளில் வைக்கப்பட்டிருக்கும் புகார் பெட்டிகளில் மாணவிகள் தங்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகள் குறித்து புகார் செய்யலாம் என்றும் அந்த புகார் பெட்டியில் உள்ள புகார்களுக்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன் பல பள்ளிகளில் மாணவிகள் மற்றும் கல்லூரி மாணவிகள் ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்களால் பாலியல் தொல்லைக்கு உள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் இதனடிப்படையில் ஒரு சில ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை வருவதற்கு முன்னரே அவர்களை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொடக்கக் கல்வி இயக்கக வட்டாரங்கள் கூறியுள்ளன.

author avatar
seithichurul

Trending

Exit mobile version