இந்தியா

வேளாண் துறையில் MSP தொடரும்; ஏர் இந்தியா விற்கப்படும்: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

Published

on

இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் 2021ல், வேளாண் துறை பற்றியும், பொதுத் துறை நிறுவனங்களில் பற்றியும் முக்கிய அறிவிப்புகள் வெளியாயின.

அந்த வகையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவுப்புகள் இதோ:

1.நாட்டில் உள்ள விவசாயிகள் நலனில் மத்திய அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. வேளாண் துறையில் குறைந்தபட்ச ஆதார விலை நடைமுறை, அதாவது எம்.எஸ்.பி தொடரும்.

2.பாரத் பெட்ரோலியம், ஏர் இந்தியா நிறுவனங்களின் பங்குகளை விற்க நடவடிக்கை எடுக்கப்படும்.

3.எல்.ஐ.சி. நிறுவனத்தின் பங்குகளை விற்க திட்டம். 2 பொதுத் துறை வங்கிகளின் பங்குகள் விற்பனை செய்யப்படும். இந்த பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதன் மூலம் 1.75 லட்சம் கோடி ரூபாய் நிதியைத் திரட்ட முடியும்.

4.நாடு முழுவதும் உள்ள அகல ரயில் பாதைகள் 2023 ஆம் ஆண்டுக்குள் மின் மயமாக்கப்படும்.

Trending

Exit mobile version