தமிழ்நாடு

தனியார் பள்ளி பெற்றோர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

Published

on

கொரோனா ஊரடங்கின் காரணமாக ஆன்லைன் வகுப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதை பயன்படுத்தி தனியார் பள்ளிகள், மாணவர்களின் முழு கல்வி கட்டணத்தையும் வசூலிப்பதாகத் தொடர்ந்து புகார் எழுது வருகிறது.

சென்னை உயர் நீதிமன்றம் பள்ளிகள் 75 சதவீதம் வரையிலான கட்டணத்தை மட்டும் தான் வசூலிக்க வேண்டும், முழு கல்வி கட்டணத்தையும் வசூலிக்கும் பள்ளிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தது.

ஆனாலும் தனியார் பள்ளிகள் கட்டணம் வசூல் கொல்லையில் ஈடுபட்டு வந்ததாக செய்திகள் மற்றும் புகார்கள் வந்தபடி உள்ளனர்.

எனவே முழு கட்டணத்தையும் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் குறித்து புகர் அளிக்க மின்னஞ்சல் முகவரி உருவாக்கப்பட்டு விரைவில் அறிவிக்கப்படும்.

அதன் மூலம் அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் குறித்து ரகசியமாக பெற்றோர்கள் புகார் அளிக்கலாம். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version