ஆரோக்கியம்

குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் பொருட்கள்!

Published

on

நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்:

நோய் எதிர்ப்புச் சக்தி என்பது பாக்டீரியா, வைரஸ்கள், ஒட்டுண்ணிகள் அல்லது பிற நுண்ணுயிரிகளால் எழும் நோய்கள் அல்லது தொற்றுகளை எதிர்க்கும் சக்தியாகும். நமது நோயெதிர்ப்பு அமைப்பு நம் உடல் முழுவதும் பரவியுள்ளது.

ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்வதன் மூலம் தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளைக் கண்டறிந்து எதிர்த்துப் போராட முடியும். இந்த செயல்முறைக்கு உதவும் உணவுகள் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.

வைட்டமின் ஏ, சி, இ ஆகியவை இயற்கையாகவே நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் தன்மை வாய்ந்தது. அதுவும் உடலுக்குள் நுழையும் நோய்க் கிருமிகளை அழிப்பதில் மிகவும் வலிமை வாய்ந்தது.

அவற்றில் ஏதேனும் ஒன்றை உங்கள் தினசரி உணவில் சேர்த்து, உங்கள் நோய் எதிர்ப்புச் சக்தியை வலுவாக வைத்திருக்கவும்.

நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் திரவ உணவுகள்:

நோய் எதிரிப்புச் சக்தியை அதிகரிக்கும் திரவ உணவுகள்:

1. இளநீர்
2. மோர்
3. லிட்டர் தண்ணீர்
4. பசும்பால்
5. பழ ஜுஸ்

நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் பழங்கள்:

1. ஆரஞ்சு
2. எலுமிச்சை
3. அன்னாசி
4. பப்பாளி
5. கொய்யா
6. சாத்துக்குடி

நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் காய்கறி வகைகள்:

1. பீட்ரூட்
2. முட்டை கோஸ்
3. குடைமிளகாய்
4. கேரட்
5. காலிஃப்ளவர்
6. இஞ்சி
7. மஞ்சள்
8. பூண்டு
9. கத்திரிக்காய்

நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் மூலிகைகள்:

1. வேப்பிலை
2. வெற்றிலை
3. தூதுவளை
4. கற்புறவள்ளி
5. துளசி
6. முடக்கத்தான்
7. முருங்கை

seithichurul

Trending

Exit mobile version