சினிமா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அந்த நடிகர்… ரசிகர்களுக்கு காத்திருக்கு விருந்து…

Published

on

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 5 இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த சீசனில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் யார் யார்? என்பது குறித்த தகவல்கள் அவ்வப்போது இணையதளங்களில் கசிந்து வருகிறது

ஏற்கனவே விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் உள்பட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் பிரியங்கா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்பட்டது. அதுமட்டுமின்றி மேலும் சிலரது பெயர்களும் பரிசீலனையில் இருப்பதாக செய்திகள் வெளியானது.

சமீபத்தில், ‘செம்பருத்தி’ சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் நடிகை பிரியா ராமன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக செய்திகள் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது. ‘செம்பருத்தி’ சீரியல் முடிவுக்கு வருகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் செம்பருத்தி ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.

iman

இந்நிலையில், சன் டிவியில் ‘குட்டி சுட்டீஸ்’ நிகழ்ச்சியை நடத்தி வரும் நடிகர் இமான் அண்ணாச்சி பிக்பாஸ் 5வது சீசனில் கலந்து கொள்ளவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இவர் பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பிக்பாஸ் தமிழ் சீசன் 5 போட்டியாளர்கள் யார் யார் என்கிற பட்டியல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending

Exit mobile version