விமர்சனம்

இமைக்கா நொடிகள் – திரை விமர்சனம்!

Published

on

நயன்தாரா, விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், அதர்வா நடிப்பில் டிமாண்ட்டி காலனி திரைப்படத்தினை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கிய திரைப்படம் தான் இமைக்கா நெடிகள்.

முதல் படத்திலேயே ஒரு வித்தியாசமான பேய் படத்தினை அளித்த அஜய் இந்த முறை க்ரைம் திரில்லர் படத்தினை அளித்துள்ளார். சரி படத்தினைப் பற்றி இனி பார்ப்போம்.

படம் துவங்கிய உடன் ஒரு பெண் கடத்தல், பணம் கேட்டு மிரட்டுகிறார் அனுராக் காஷ்யப். இது குறித்த தகவல் சிபிஐ அதிகாரியான நயன்தாராவிற்குத் தெரிய வருகிறது. யார் அந்தக் கடத்தல் காரர் என்று விசாரணை செய்யும் நிலையில் பணத்தினைப் பெற்றுக்கொண்டு அந்தப் பெண்ணை அனுராக் கொலை செய்துவிடுகிறார்.

அதோடு இல்லாமல் தொடர்ந்து இது போன்ற கடத்தல், கொலை சம்பவங்கள் நடைபெற நயன்தாராவின் தம்பியான அதார்வா மற்றும் அவரது கதலியான ராஷி இருவரும் சிறு பிரச்சனையில் பிரிகிறார்கள். மீண்டும் இருவரும் சந்திக்கும் நேரத்தில் அதர்வாவின் காதலியும் கடத்தப்படுகிறார். அதர்வா தான் கடத்தியுள்ளார் எனக் கைது செய்யப்பட நயன்தாராவின் வேலைக்குப் பிரச்சனை வருகிறது.

பின்னர் அந்தச் சிக்கலான சூழலில் இருந்து நயன்தாரா தனது தம்பியைக் காப்பாற்றினாரா இல்லையா, அனுராக் யார், ஏன் இந்தக் கொலைகளைச் செய்கிறார், ராஷி கன்னாவை அதர்வா காப்பாற்றினாரா என்பது மீதக் கதை.

அதற்கு இடையில் கவுரவ வேடத்தில் விஜய் சேதுபதி நயன்தாராவின் காதல் ரசிகர்களைப் பெரிய அளவில் கவர்ந்தது எனலாம். ஹிப் ஹாப் தமிழா ஆதியின் இசையில் பாடல்கள் சிறப்பாக உள்ளன. பின்னணி இசையும் சிறப்பாக அளித்துள்ளார்.

நயன்தாரா சிபிஐ அதிகாரியாக, அக்காவாக, காதலியாக எனத் தனது கதாப்பாத்திரத்தினைச் சிறப்பாகச் செய்து தான் ஒரு லேடி சூப்பர் ஸ்டார் என்று நிரூபித்துள்ளார். அனுராக் காஷ்யப் இந்தியில் மிகப் பெரிய இயக்குநராக உள்ள நிலையில் இனி வில்லனாகவும் ஒரு ரவுண்ட் வருவார்.

அதர்வா இளமை துள்ளலுடன் நடித்துத் தன் பங்கைச் சிறப்பாகச் செய்துள்ளார். சில லாஜிக் மீறல்கள், அதர்வா மற்றும் ராஷி கன்னா இடையிலான காதல் காட்சிகள் சிறிது இழுவை தான். இருப்பினும் டிமாண்டி காலனி போன்றே இந்தப் படம் நிதானமான வேகத்தில் சென்றாலும் ரசிகர்களைக் கவரும் எனலாம்.

Trending

Exit mobile version