சினிமா செய்திகள்

ஆடை படத்தின் பாடல் ஜேம்ஸ் பாண்ட் பட பாடலின் காப்பியா?

Published

on

அமலாபால் நடித்துள்ள ஆடை படத்தின் நீ வானவில்லா பாடலின் 3டி லிரிக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இது ஜேம்ஸ்பாண்ட் படங்களில் வரும் இன்ட்ரோ பாடல் மாதிரியே உள்ளது என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

மேயாத மான் படத்தை இயக்கிய ரத்னகுமார் இயக்கத்தில் அமலாபால் நடித்துள்ள படம் ஆடை. இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி இந்தியளவில் சர்ச்சையை கிளப்பியது. சில பேர் அமலா பாலின் துணிச்சலை பாராட்டினாலும், பல பேர், இப்படியா நிர்வாணமாக நடிப்பது என விமர்சனங்களையும் முன் வைத்துள்ளனர்.

இந்த படத்தின் போஸ்டர்கள் கதையம்சம் ஆங்கிலத்தில் வெளியான ஐ ஸ்பிட் ஆன் யுவர் கிரேவ் படத்தின் காப்பியாக இருக்கலாம் என்றொரு தகவல் பரவி வரும் நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள முப்பரிமாண லிரிக் வீடியோ அப்படியே ஜேம்ஸ்பாண்ட் படத்தில் வரும் டைட்டில் சாங் போலவே உள்ளது என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

விஜயகாந்த் நடித்த அலெக்ஸாண்டர் படத்தின் டைட்டில் டிராக்கிலும் அப்படியே ஜேம்ஸ் பாண்ட் டைட்டில் டிராக் போன்ற பாடலை பயன்படுத்தியிருப்பார்கள். இதனை காப்பி என்று சொல்வது தவறு இன்ஸ்பிரேஷன் என்றே சொல்ல வேண்டும் என்றும் ஒரு சாரார் ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

சமூகத்தில் தற்போது நடைபெற்று வரும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை கதையையும் அதனை எதிர்த்து அந்த பெண்கள் போராட வேண்டும் என்ற சமூக அக்கறை கொண்ட படமாக ஆடை வரும் என தெரிகிறது. விரைவில் ஆடை என்ன சொல்ல வருகிறது என்பதை பார்ப்போம்.

seithichurul

Trending

Exit mobile version