தமிழ்நாடு

இன்று முதல் இல்லம் தேடி கல்வி திட்டம்: முதல்வர் தொடங்கி வைக்கின்றார்.

Published

on

பள்ளி மாணவர்களின் கற்றல் இடைநிற்றலை சரி செய்யும் விதமாக தமிழக அரசு சமீபத்தில் இல்லம் தேடி கல்வி என்ற திட்டத்தை கொண்டுவந்தது என்பதும் இந்த திட்டம் இன்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களால் தொடங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

200 கோடி ரூபாய் இந்த திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டு உள்ளது என்றும் முதல் கட்டமாக காஞ்சிபுரம், விழுப்புரம், மதுரை, திருச்சி, நாகப்பட்டினம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, நீலகிரி உள்பட 12 மாவட்டங்களில் இந்த திட்டம் செயல்படுத்த உள்ளதாகவும் இந்த திட்டத்திற்கு உதவி செய்பவர்கள் ஆன்லைன் வழியாக பதிவு செய்யும் முறை நடைபெற்று வருகிறது என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது

இந்த திட்டத்தின்படி 6 மாத காலம் தன்னார்வலர்கள் தினமும் ஒரு மணி நேரம் ஆடல், பாடல், நாடகம், பொம்மலாட்டம் போன்றவைகளை குழந்தைகளுக்கு புதுமையான முறையில் சொல்லிக் கொடுப்பார்கள் என்றும், பள்ளிக் கல்வி இயக்ககம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது

மேலும் இல்லம் தேடி கல்வி என்ற திட்டத்தை செயல்படுத்தக் கூடிய இடம் சுகாதாரமானதாகவும், பாதுகாப்பானதாகவும், மின்சார வசதி மற்றும் குடிநீர் வசதியுடன் இருக்க வேண்டும் என்றும், மதச்சார்பற்ற மற்றும் பாகுபாடு அற்ற இடமாக இருக்க வேண்டும் என்றும் அரசு கட்டிடங்கள் சமுதாய இடங்கள் போன்றவைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது

20 குழந்தைகளுக்கு ஒரு தன்னார்வலர் என்ற வகையில் இந்த திட்டத்தின்படி கல்வி கற்பிக்கப்படும் என்றும், வகுப்புகளுக்கான பாடத் திட்டத்தை மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் தயாரித்து வழங்கும் என்றும் தினமும் மாலை 5 மணி முதல் 7 மணி வரை இந்த பாடத்திட்டம் நடக்கும் என்றும் பள்ளி செல்ல முடியாமல் இடையில் கல்வியை நிறுத்திய மாணவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக கருதப்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version