சினிமா செய்திகள்

எனக்கு ஆக்‌ஷனும் வரும் – கதிரின் சத்ரு டீஸர் ரிலீஸ்!

Published

on

மதயானைக் கூட்டம், கிருமி, பரியேறும் பெருமாள் என வரிசைக் கட்டி வித்தியாசமான படங்களில் சிறப்பான நடிப்பைக் கொடுத்து வரும் கதிர், வரும் பிப்ரவரியில் சிங்கம் சூர்யாவாக போலீஸ் உடையில் அதிரடி ஆக்‌ஷன்களுடன் களமிறங்குகிறார். சத்ரு எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தின் டீஸர் தற்போது வெளியாகி பாராட்டுப் பெற்று வருகிறது.

நவீன் நஞ்சுண்டான் இயக்கத்தில் ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகியுள்ள இந்த படத்தில் கதிருக்கு ஜோடியாக ஸ்ருஷ்டி டாங்கே நடித்துள்ளார். பிக்பாஸ் சுஜா வருணியும் முக்கியமான ரோலில் நடித்துள்ளார்.

வரும் ஜனவரி 9ம் தேதி கதிர் திருநங்கையாக நடித்துள்ள சிகை திரைப்படம் ஜி5 ஒரிஜினல் சினிமாவாக ஜி5 இணையதளம் மற்றும் மொபைல் ஆப்பில் ரிலீசாவது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டில் பரியேறும் பெருமாள் எனும் சாதிக்கு எதிரான படத்தை கொடுத்த கதிர், இந்த ஆண்டின் துவக்கத்திலே அடுத்தடுத்து இரு படங்களை கொடுத்து ஆடியன்ஸ்களை உற்சாகப்படுத்த உள்ளார்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version