இந்தியா

இளையராஜா தான் அடுத்த ஜனாதிபதி: முக ஸ்டாலினுக்கு செக் வைத்த பாஜக!

Published

on

இசைஞானி இளையராஜாதான் அடுத்த ஜனாதிபதி என பாஜக முடிவு செய்திருப்பதாக வெளிவந்திருக்கும் தகவலால் திமுகவுக்கு செக் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வரும் ஜூலை மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து இந்த தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து ஒரு பொது வேட்பாளரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த திமுக திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து மம்தா பானர்ஜி உள்பட பல தேசிய தலைவர்களுடன் திமுக தலைவர் பேசி வருவதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் திடீரென இளையராஜாவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த பாஜக திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஒருவேளை இளையராஜா சம்மதம் தெரிவிக்கவில்லை என்றால் இஸ்ரோ சிவன், தமிழிசை சௌந்தர்ராஜன் ஆகிய இருவரில் ஒருவர் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார் தமிழகத்திலிருந்து ஒரு தமிழன் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டால், திமுகவுக்கு நெருக்கடி ஏற்படும் என்று பாஜக கருதுவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே ஜிகே மூப்பனார் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட்ட நிலையில் திமுக அவருக்கு ஆதரவு தரவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. தற்போது தமிழர் ஒருவர் ஜனாதிபதி ஆவதை திமுக தடுக்குமா? என்ற தர்மசங்கடம் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு திமுக தரப்பில் இருந்து பதிலடியாக தமிழகத்தில் இருந்து ஒரு தமிழரை ஜனாதிபதி வேட்பாளராக பாஜகவை எதிர்த்து நிறுத்த அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

 

Trending

Exit mobile version