சினிமா

டிக்கிலோனா புகழ் ‘பேர் வச்சாலும்’ பாடல் எப்படி உருவானது?…இளையராஜா பேசிய வீடியோ….

Published

on

கமல் நடித்து 31 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த திரைப்படம் மைக்கேல் மதன காமராஜன். இப்படதில் 4 வேடத்தில் கமல்ஹாசன் நடித்திருப்பார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களுமே செம ஹிட்.

இப்படத்தில் இடம் பெற்ற ‘பேர் வச்சாலும் வைக்காம போனாலும்’ பாடலை சந்தானம் நடித்த டிக்கிலோனா படத்தில் மீண்டும் பயன்படுத்தியிருந்தனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இந்த பாடலில் நடனம் ஆகிய அப்படத்தின் கதாநாயகி அனாகா ரசிகர்களிடம் மிகவும் பிரபலமாகி விட்டார்.

அப்பாடலில் அவர் நடனமாடியதை மட்டும் எடிட் செய்து அந்த வீடியோக்களை நெட்டிசன்கள் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்த பாடல் எப்படி உருவானது என்பதற்கான சுவாரஸ்யமான விளக்கத்தை கொடுத்துள்ளார். இப்பாடலுக்கான மெட்டை வாலியுடம் கூறிய போது, இது என்ன்னயா மெட்டு, இதற்கு எப்படி பாடல் எழுதுவது எனக்கேட்டார். அதற்கு ‘துப்பார்க்கு துப்பாய’குறள் மூலம் வள்ளுவர் ஏற்கனவே இப்பாடலை எழுதிவிட்டார் எனக்கூறினேன். அதன்பின்னரே இப்பாடல் உருவானது என அவர் கூறினார்.

இந்த வீடியோவை இளையராஜாவின் மகனும், இசையமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

 

seithichurul

Trending

Exit mobile version