சினிமா செய்திகள்

இளையராஜாவுக்கு சப்போர்ட் செய்யும் சீனுராமசாமி!

Published

on

96 படத்தில் தனது பாடல்களை பயன்படுத்தியது ஆண்மையற்றத்தனம் என கடுமையாக இளையாராஜா பேசியதற்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

நெட்டிசன்கள் பலரும் இளையாராஜாவை வைத்து நேற்றைய பொழுதை சிறப்பாக மீம்ஸ் போட்டு ஓட்டிக்கொண்டனர்.

இந்நிலையில், இளையாராஜவுக்கு ஆதரவாக இயக்குநர் சீனு ராமசாமி குரல் கொடுத்துள்ளார்.

80 மற்றும் 90 காலக்கட்டங்கள் குறித்த வரலாற்று படம் எடுக்க வேண்டுமானால், இளையாராஜவின் பாடல்களை பயன்படுத்தாமல் எடுக்க முடியாது. ராஜா சார் 96 படத்தை பார்த்திருந்தால் பாராட்டியிருப்பார். வெறுமனே அவரிடம் அப்படி ஒரு கேள்வி கேட்டதால் அவர் கோபத்துடன் அவ்வாறு பதில் அளித்தார் என சீனு ராமசாமி கூறியுள்ளார்.

96 படத்திற்கு பாராதிராஜா தரப்பில் எழுந்த பிரச்னை காரணமாகத் தான் இளையராஜா அவ்வாறு பேசினார் என மற்றொரு தரப்பும் கூறி வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version