சினிமா செய்திகள்

பாஜகவில் சேர்ந்துவிடுவாரா இளையராஜா? ஜேபி நட்டா ஆதரவுக்குரல்!

Published

on

இசைஞானி இளையராஜாவுக்கு தொடர்ந்து பாஜகவினர் ஆதரவு தந்து கொண்டிருப்பதை பார்க்கும் போது அவர் பாஜகவில் இணைந்து விடுவாரோ என்ற ஐயம் பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் பிரதமர் மோடியையும் அம்பேத்கரையும் ஒப்பிட்டு இளையராஜா கூறிய கருத்து பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது. இது குறித்து திமுகவினரும் அவர்களது கூட்டணி கட்சியினரும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர் மேலும் இளையராஜா தனது கருத்தை வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இளையராஜா தனது கருத்தை வாபஸ் பெற முடியாது என்று கூறிவிட்டார்.

இந்த நிலையில் ஏற்கனவே இளையராஜாவின் கருத்துக்கு பாஜக வினர் பலர் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் தற்போது பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா ஆதரவு தெரிவித்துள்ளார். இளையராஜா அவமானப்படுத்துவதா? என்றும் தங்களுக்கு சாதகமாக பேசவில்லை என்பதற்காக ஒரு இசை மேதையை அவமதிப்பது சரியான அணுகுமுறை கிடையாது என்றும் ஜேபி நட்டா தெரிவித்துள்ளார்.

ஒவ்வொருவருக்கும் தனித்தனி கொள்கைகள் பார்வைகள் இருக்கும் என்றும் தங்களுக்கு மட்டுமே ஒத்து ஊத வேண்டும் என நினைப்பது, வலியுறுத்துவது எப்படி சரியான ஜனநாயகம் ஆகும் என்றும் ஜேபி நட்டா கேட்டுள்ளார்.

தொடர்ந்து இசைஞானி இளையராஜாவுக்கு பாஜகவினர் ஆதரவு கொடுத்து வருவதை பார்க்கும் போது அவர் விரைவில் பாஜகவில் இணைந்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Trending

Exit mobile version