சினிமா செய்திகள்
இந்த பாட்டு இல்லாத ஒரு புத்தாண்டா? இளையராஜாவின் வைரல் வீடியோ!
![ilaiyarajaa - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/12/ilaiyarajaa.jpg)
இசைஞானி இளையராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் தான் கம்போஸ் செய்த புத்தாண்டு பாடலை காரில் சென்று கொண்டிருக்கும் போது பாடும் வீடியோவை வெளியிட்ட நிலையில் அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
ஒவ்வொரு புத்தாண்டன்று இசைஞானி இளையராஜாவின் ’இளமை இதோ இதோ’ என்ற பாடல் ஒலிக்காமல் யாரும் புத்தாண்டு கொண்டாடுவது இல்லை என்பதே நிதர்சனமான உண்மை என்பது குறிப்பிடத்தக்கது.
பட்டிதொட்டியெங்கும் கடந்த பல ஆண்டுகளாக புத்தாண்டன்று இந்த பாடல் ஒலித்து வருகிறது என்பதும் அந்த வகையில் இந்த ஆண்டும் இன்று இரவு புத்தாண்டு கொண்டாடப்பட உள்ள நிலையில் இந்த பாடலை ஒலித்துக்கொண்டே புத்தாண்டு கொண்டாட அனைவரும் தயாராகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இசைஞானி இளையராஜா அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் இளமை இதோ இதோ என்ற பாடலை பாடி அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் கூறுகிறார். இது குறித்த வீடியோ அவருடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
Wish you all happy new year 2022.#HappyNewYear2022 pic.twitter.com/cSlW4BKQGa
— Ilaiyaraaja (@ilaiyaraaja) December 31, 2021