வணிகம்

ஹைதராபாத்தினை அடுத்து 3,000 கோடி முதலீட்டில் மேலும் 3 நகரங்களில் கடையை விரிக்கும் ஐகியா!

Published

on

ஸ்வீடிஷை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஐகியா மரச்சாமான்கள் நிறுவனம் அன்மையில் ஹைதராபாத்தினைத் தங்களது ஷோரூமை தொடங்கியது மட்டும் இல்லாமல் 3000 கோடி ரூபாய் முதலீட்டில் மேலும் 3 இந்திய நகரங்களில் கடையை விரிக்க முடிவு செய்துள்ளது.

ஐகியாவின் இரண்டாவது கடையினை மும்பையில் திறக்க உள்ளதாகத் தெரிவித்துள்ள அந்நிறுவனத்தின் இந்திய துணை மேலாளர் பேட்ரிக் ஆண்டனி டெல்லி மற்றும் பெங்களூருவிலும் அடுத்தடுத்து கடைகளைத் திறக்க இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இந்தியாவில் இருந்து மட்டும் 50 சப்ளையர்கள் ஐகியா நிறுவனத்திற்கு உள்ளார்களாம். ஆகஸ்ட் மாதம் ஹைதராபாத்தில் மரச்சாமான்கள் கடை மட்டும் இல்லாமல் ஒரே நேரத்தில் 1000 நபர்கள் அமர்ந்து சாப்பிடக் கூடிய ரெஸ்டாரண்ட்டையும் திறந்தது.

அந்த ரெஸ்டாரண்ட்டின் பிரியாணியில் புழுவும், கேக்கில் பூச்சி இருந்ததாகவும் அடுத்தடுத்துப் புகார்கள் வந்து பரபரப்பினை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version