தமிழ்நாடு

திமுக கூட்டணியில் ஆரம்பித்தது அதிருப்தி: ஐஜேகே கட்சி ஆலோசனை!

Published

on

திமுக கூட்டணியில் இணைந்த பாரிவேந்தரின் ஐஜேகே கட்சி அந்த கூட்டணியில் தொடரலாமா அல்லது விலகலாம என்பது குறித்து பாரிவேந்தர் தலைமையில் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

திமுக தலைமையிலான கூட்டணிக்கு தனது ஆதரவை தெரிவித்த ஐஜேகே கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது. அப்போது தங்களுக்கு கள்ளக்குறிச்சி தொகுதி ஒதுக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார் பாரிவேந்தர். திமுக தலைமையும் அதற்கு ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாரிவேந்தரின் மகன் ரவியும் தாங்கள் கள்ளக்குறிச்சி தொகுதியை கேட்டுள்ளதாக தெரிவித்தார்.

இது ஒருபுறம் இருக்க முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் கௌதம சிகாமணி கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளித்துள்ளார். உதயநிதியின் சிபாரிசில் அவரது கோட்டாவின் கீழ் கௌதம சிகாமணிக்கு கள்ளக்குறிச்சி தொகுதி ஒதுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பெரம்பலூர் தொகுதி ஐஜேகேவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது ஐஜேகேவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த முறை பெரம்பலூரில் ஐஜேகே தலைவர் பாரிவேந்தர் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். ஆனால் இந்தமுறை கள்ளக்குறிச்சிக்கு பதிலாக பெரம்பலூரே கிடைத்த தகவல் கிடைத்தவுடன் பாரிவேந்தர் தனது கட்சி நிர்வாகிகளோடு ஆலோசனை நடத்தியிருக்கிறார்.

கள்ளக்குறிச்சி தொகுதிதான் வேண்டும் என கேட்டோம். அவர்களும் வாக்குறுதி கொடுத்தார்கள். ஆனால் தற்போது பெரம்பலூரை எடுத்துக் கொள்ளுங்கள் என்கிறார்கள். கள்ளக்குறிச்சி இல்லை என்றுகூறி சொன்னதை செய்யாத திமுக கூட்டணியில் தொடரலாமா? என ஆலோசனை நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Trending

Exit mobile version