இந்தியா

ஐஐடி மாணவருக்கு ரூ.4 கோடி சம்பளத்தில் வேலை.. சென்னை மாணவர்களுக்கும் அடித்த அதிர்ஷ்டம்1

Published

on

இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பல முன்னணி நிறுவனங்கள் வேலை நீக்க நடவடிக்கையை எடுத்து வரும் நிலையில் ஒரு சில நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளும் கிடைத்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

அந்த வகையில் இந்தியாவில் உள்ள முன்னணி ஐஐடி நிறுவனங்களான டெல்லி, பம்பாய், கான்பூர் ஐஐடி நிறுவனங்களில் படித்த மாணவர்களுக்கு கோடிக்கணக்கில் சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐஐடி கான்பூரில் படித்த மாணவர்களில் ஒருவருக்கு ரூ.4 கோடி சம்பளத்தில் ஜேன் ஸ்ட்ரீட் என்ற நிறுவனம் வேலை கொடுத்துள்ளதாக கான்பூர் ஐஐடியின் நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார். அதேபோல டெல்லி மற்றும் பம்பாய் ஐஐடியை சேர்ந்த 2 மாணவர்களுக்கு உலகின் மிகப் பெரிய நிறுவனத்தில் ரூபாய் 4 கோடி சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளது

மேலும் ஐஐடி சென்னை மற்றும் கவுகாத்தி மாணவர்களுக்கும் அதிர்ஷ்டம் அடித்துள்ளதாகவும் உலகின் முன்னணி நிறுவனங்களில் கோடிக்கணக்கில் சம்பளத்துடன் வேலை கிடைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. ஐஐடி சென்னையில் படித்த 333 மாணவர்களுக்கு இந்த ஆண்டு நல்ல கிடைத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும் குவால்காம், மைக்ரோசாப்ட், ஹனிவெல், டெக்சாஸ் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் மற்றும் கோல்ட்மேன் சாக்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஐஐடியில் படித்த மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க முன்வந்துள்ளன என்றும் குறிப்பாக குவால்காம் மற்றும் ஹனிவெல் ஆகிய நிறுவனங்கள் 19 மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளது.

Trending

Exit mobile version