இந்தியா

முழுக்க முழுக்க பாதுகாப்பான மொபைல் OS: சென்னை ஐஐடி சாதனை!

Published

on

முழுக்க முழுக்க பாதுகாப்பான மொபைல் இயங்குதளம் ஒன்றை சென்னை ஐஐடி கண்டுபிடித்துள்ளதை அடுத்து மொபைல் பயனாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மொபைலில் நாம் பல ரகசிய தகவல்கள் மற்றும் முக்கியமான ஆவணங்களை பார்த்துக் கொண்டிருப்போம். இந்த நிலையில் அவை ஹேக் செய்யப்படாமல் இருப்பதற்காக பாதுகாப்பான ஓஎஸ் என்பது மிகவும் அவசியம். அந்த வகையில் ஏற்கனவே பல பாதுகாப்பான ஓஎஸ் இருந்தாலும் தற்போது சென்னை ஐஐடி தயாரித்துள்ள BharOS என்ற இயங்குதளம் உள்நாட்டிலேயே முழுக்க முழுக்க தயாரிக்கப்பட்டது என்பதும் முழுக்க முழுக்க பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டது என்றும் கூறப்படுகிறது.

சென்னை ஐஐடியின் இந்த தயாரிப்பு இந்தியாவில் மொபைல் போன் வைத்திருக்கும் சுமார் 100 கோடி பேர்களுக்கு பயன்படும் வகையில் உள்ளது என்றும் BharOS என்று அழைக்கப்படும் இந்த மென்பொருளை எந்த மொபைல் போனில் வேண்டுமானாலும் இன்ஸ்டால் செய்ய முடியும் என்றும் இது பயனர்களுக்கு மிகவும் பாதுகாப்பான சூழலை வழங்கும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ரகசிய தகவல்கள் பரிமாற்றம் செய்யப்படும் போது, முக்கிய தகவல்களை கையாளும்போது தனி உரிமை மற்றும் பாதுகாப்பு தேவைகளை இந்த BharOS வழங்கி வருகிறது என்றும் இந்த ஓஎஸ் மிகவும் பாதுகாப்பாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

5கொ நெட்வொர்க் மூலம் தனியார் கிளவுட் சேவைகளை கொண்டு இயங்கும் இந்த BharOS தொழில்நுட்பத்தில் மிகவும் மேம்பாடு கொண்டது என்றும் நவீன டெக்னாலஜியை பயன்படுத்தி இது உருவாக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது. இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் நிதி உதவி மூலம் இந்த இயங்குதளம் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் இந்தியா மட்டுமின்றி அனைத்து நாடுகளில் உள்ள மொபைல்போன் பயனாளர்களும் இந்த ஓஎஸ்-ஐ பயன்படுத்தி கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் முன்னணி ஒஎஸ் நிறுவனங்களுக்கு இணையாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்த BharOS இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி அவர்கள் கூறிய போது BharOS என்பது அனைத்து மக்களின் நம்பிக்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இயங்குதளம் என்றும், சுதந்திரம், கட்டுப்பாடு, நெகிழ்வுத்தன்மை ஆகியவற்றை உறுதி செய்வதுடன் பயனர்கள் தங்களுக்கு தேவை என கருதும் செயலியாக மேம்படுத்தப்பட்டது என்றும் அதிக கவனம் செலுத்தப்பட்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த ஓஎஸ் தனி உரிமையை உறுதிப்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் எந்த மாடல் மொபைல் போனிலும் இந்த ஓஎஸ்-ஐ இன்ஸ்டால் செய்யலாம் என்றும் பயனர்கள் தங்களுக்கு அறிமுகம் இல்லாத அல்லது நம்பிக்கை இல்லாத செயலிகளை பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு இந்த ஓஎஸ்-ஐ தாராளமாக பயன்படுத்தலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. எந்தெந்த செயலிகளை அனுமதிக்கெல்லாம் எந்தெந்த செயலிகளை அனுமதிக்க வேண்டாம் என்பது குறித்த பரிந்துரைகள் இந்த ஓஎஸ் மூலம் பயனர்களுக்கு வழங்கப்படும் என்றும் எந்தெந்த டேட்டாக்களை மட்டுமே டவுன்லோட் செய்து கொள்ளலாம் என்பதையும் அறிவுறுத்தும் என்றும் கூறப்படுகிறது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version