இந்தியா

ஜேஇஇ தேர்வுகளை சர்வதேச அளவில் நடத்த மத்திய அரசு முடிவு!

Published

on

தேசிய அளவில் தற்போது ஜேஇஇ நுழைவுத்தேர்வு நடைபெற்று வரும் நிலையில் இதனை சர்வதேச அளவில் நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

உலகம் முழுவதும் 65 நாடுகளில் ஜேஇஇ நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட இருப்பதாகவும் குறிப்பாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, சிங்கப்பூர், சீனா, நேபாளம், இந்தோனேசியா, மலேசியா, பஹ்ரெய்ன், குவைத், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் தேர்வுகள் நடைபெற திட்டமிட்டு உள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது

வெளிநாட்டு இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டு மாணவர்களுக்காக இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கான இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் நாட்டில் தலை சிறந்த பொறியியல் கல்லூரியில் வெளிநாடு வாழ் இந்தியர்களும் படிக்கலாம் என்ற நோக்கத்தில் சர்வதேச அளவில் இந்த ஜேஇஇ நுழைவுத் தேர்வு நடத்தப்பட இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது

இந்த திட்டத்திற்காக அறுபத்தி மூன்று நாடுகளில் உள்ள இந்திய தூதர் அழைக்கப்பட்டு அவர்களுடன் ஆலோசனை செய்யப்பட்டுள்ளதாக யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் அவர்கள் தெரிவித்துள்ளார். என்ஐடி, ஐஐஐடி, என்ஐஎஃப்டி ஆகிய படிப்புகளில் சேருவதற்கு இனி சர்வதேச அளவில் தேர்வுகள் நடக்கும் என்றும் இந்த தேர்வுகள் தமிழ் உள்பட பல மொழிகளில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது

 

seithichurul

Trending

Exit mobile version