இந்தியா

மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் வேலைநீக்கம் செய்யப்பட்ட கான்பூர் இளைஞரின் கண்ணீர் பதிவு..!

Published

on

கடந்த மாதம் மைக்ரோசாப்ட் நிறுவனம் சுமார் 10,000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்த நிலையில் வேலை நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் பதிவுகள் வெளியாகி கண்ணீரை வரவழைத்து வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் கான்பூர் ஐஐடியில் படித்த ஒருவர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராக பணி செய்து கொண்டிருந்த நிலையில் திடீரென அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார். அவருடைய கண்ணீர் பதிவு பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

சாஹா என்ற அந்த நபரின் பதிவில், ‘நான் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராக பணிபுரிந்து கொண்டிருந்த நிலையில் திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டேன். பிஹெச் டி படித்த பிறகு ஒரு வருடத்திற்கு பின்னர் எனக்கு கிடைத்த இந்த வேலை பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியது. ஆனால் தற்போது அந்த வேலை என்னை கைவிட்டு விட்டதால் நம்பிக்கையை இழந்து உள்ளேன்.

நிறுவனத்தில் வேலை பார்க்கும் போது என்னை சுற்றி இருந்தவர்களை நான் நேசித்தேன், எனது திறமையை முழு அளவில் வெளிப்படுத்த அனைத்து முயற்சிகளும் செய்தேன், ஆனால் திடீரென நான் பணி நீக்கம் செய்யப்பட்டது என்னை நிலைகுலைய வைத்துள்ளது. இந்த சூழ்நிலையை என்னால் சமாளிக்க முடியும் என்று நம்புகிறேன். கல்வி மற்றும் தொழில் துறை ஆகிய இரண்டிலும் ஆராய்ச்சி நிலைகளுக்கு நான் உதவியாக இருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து அவருடைய கண்ணீர் பதிவு இருக்கு பல நெட்டிசன்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். உங்கள் ஆராய்ச்சி பணியில் நீங்கள் ஒரு அரிய கண்டுபிடிப்பை கண்டுபிடித்தீர்கள், நிச்சயம் உங்களுக்கு வேறொரு வேலை கிடைக்கும். நீங்கள் ஒரு ராக் ஸ்டார், வாய்ப்புகளின் கதவுகள் உங்களுக்கு விரைவில் திறக்கும் என்று ஒருவர் பதிவு செய்துள்ளார்.

நீங்கள் ஒரு அற்புதமான ஆராய்ச்சியாளர், நல்ல மனிதநேயம் உள்ளவர், கண்டிப்பாக உங்கள் திறமை உங்களுக்கு உதவியாக இருக்கும், தற்போதைய நிலை கடினமானதாக இருந்தாலும் மீண்டும் உங்களுடைய நிலை மாறும் என்று நம்புகிறேன் என்று இன்னொருவர் பதிவு செய்துள்ளார்.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் வேலை பார்க்கும் போது நீங்கள் ஒரு சூப்பர் ஸ்டார் ஆக இருந்தீர்கள், உங்களை எனக்கு நன்றாக தெரியும், உங்களுடைய நிலைமைக்கு நான் மிகவும் வருந்துகிறேன், கண்டிப்பாக நீங்கள் மீண்டு வருவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது, நீங்கள் ஒரு அற்புதமான ஆராய்ச்சியாளர் என்று இன்னொருவர் பதிவு செய்துள்ளார்.

இந்த அனைத்து பதிவுகளுக்கும் நன்றி கூறிய சாஹா, ‘கடந்த ஒன்றரை நாட்களாக எனக்கு கிடைத்திருக்கும் அளப்பரிய அன்பையும் ஆதரவையும் என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. ஒவ்வொரு செய்தியும் என்னை கண்ணீரை வரவழைக்கிறது, கண்டிப்பாக இதை நான் சமூகத்திற்கு திருப்பி செலுத்த முடியும் என்று நம்புகிறேன், நீங்கள் அனைவரும் மிகவும் அருமையானவர்கள், என்னை மனித குலத்தின் மீது நம்பிக்கையை வலுப்படுத்தி இருக்கிறீர்கள்’ என்று தெரிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version