இந்தியா

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க புதிய சாதனங்களைத் தயாரித்த ஐஐடி, ஏயிம்ஸ் முன்னாள் மாணவர்கள்!

Published

on

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க ஐஐடி மற்றும் ஏயிம்ஸ் கல்வி நிறுவனங்களில் படித்த முன்னாள் மாணவர்களான, தெபயான் ஷா மற்றும் சஷி ரஞ்சன் இருவரும் ‘Airlens Minus Corona’ என்ற சாதனத்தை உருவாக்கியுள்ளனர்.

இதை கார், பேருந்து, ரயில் போன்றவற்றில் பொருத்தினால் போகும் வழியெல்லாம் தூய்மைப்படுத்தும்.மேலும், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், ரயில்வே நிலையங்கள், ஷாப்பிங் மால் மற்றும் பிற பொது இடங்களிலும் இதை பொருத்தி கொரோனா வைரஸ் பாதிக்காத வகையில் தூய்மையாக்க முடியுமாம்.

இந்த சாதனத்திலிருந்து வெளியேறும் மின் மயமாக்கல் நீர் துளிகள் கொரோனா வைரஸை சானடைசர் போன்று கொல்ல உதவும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, இவர்கள் இருவரும் வாகனப் புகையால் ஏற்படும் மாசுவை குறைக்கவும், கார் சானடைசர் போன்றவற்றைக் கண்டுபிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version