இந்தியா

ஆண்டுக்கு ரூ.1.14 கோடி சம்பளம்.. ஐஐஎம் இந்தூர் மாணவரின் சாதனை..!

Published

on

ஐஐஎம் இந்தூரில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர் ஒருவருக்கு ஆண்டுக்கு 1.14 கோடி சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளதை அடுத்து அந்த நிறுவனத்தில் படித்த மாணவர்களிலே அதிக சம்பளத்தில் வேலை பெறும் மாணவர் இவர் தான் என்ற சாதனை கிடைத்துள்ளது.
இந்தியாவிலுள்ள ஐஐடி, ஐஐஎம் நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள் மிகப்பெரிய நிறுவனங்களில் மிகப்பெரிய சம்பளத்தில் பணி செய்து வருகிறார்கள் என்பதும் அவர்கள் இறுதி ஆண்டு படிக்கும்போதே கேம்ப்ஸ் இண்டர்வியூ மூலம் வேலைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறார்கள் என்பதையும் பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் ஐஐஎம் இந்தூரில் படித்த மாணவர்கள் சமீபத்தில் வேலை பெற்ற நிலையில் அவர்களில் ஒரு மாணவருக்கு ஆண்டுக்கு ரூ.1.14 கோடி சம்பளம் கிடைக்கும் வேலை கிடைத்துள்ளது. இது குறித்து ஐஐஎம் அதிகாரி ஒருவர் தெரிவித்த போது ஐஐஎம் இந்தூரில் படித்த மாணவர்கள் மிக அதிகமாக 65 லட்சம் சம்பளம் பெற்ற நிலையில் தற்போது 1.14 கோடி சம்பளம் பெறும் வகையில் வேலை கிடைத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

ஐஐஎம் மாணவர்களின் வேலை வாய்ப்பை பொருத்தவரை சராசரியாக ரூ.49 லட்சம் சம்பளமாக பெற்று வருகிறார்கள் என்றும் கடந்த ஆண்டு 160 க்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களில் சேர்ந்துள்ளார்கள் என்றும் அவர்களின் சராசரி சம்பளம் இன்னும் அதிகரிக்கும் என்றும் தெரிவித்தார்.

இந்த ஆண்டு இரண்டு முதுகலை பட்டம் படித்த மாணவர்களுக்கு மிகப்பெரிய பணி கிடைத்துள்ளது என்றும் ஏராளமான சலுகைகளும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் இந்த பிஜிபி என்ற இந்த படிப்பு எம்பிஏவுக்கு சமமானதாக கருதப்படுகிறது என்றும் தெரிவித்தார்.

மேலும் இந்தூர் கன்சல்டிங் துறையில் 29 சதவீத வேலைகள் வழங்கப்படுவதாகவும் அதை தொடர்ந்து பொது நிர்வாகம், நிதி மற்றும் தகவல் தொழில்நுட்பத்திலும் வேலை வாய்ப்பு கிடைக்கிறது என்றும் தெரிவித்தார். உலக தரம் வாய்ந்த கல்வியை ஐஐஎம் அளித்து வருவதை அடுத்து மாணவர்களுக்கு உடனடியாக வேலை கிடைத்து விடுகிறது என்றும் தொழில் நிறுவனங்களுடன் எங்கள் உறவை வலுப்படுத்தி வருவதால் எங்கள் மாணவர்களுக்கு உடனடியாக வேலை கிடைத்திருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

உலகம் முழுவதும் வேலை இழப்பு ஏற்பட்டு வரும் சவாலான இந்த நிலையில் கூட எங்கள் மாணவர்கள் சிறந்த வேலை வாய்ப்புகளை பெறுகிறார்கள் என்பதற்கு இது ஒரு சான்று என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Trending

Exit mobile version