ஆரோக்கியம்

இதைத் தினமும் பயன்படுத்தினால் உடலில் உள்ள நோய்கள் நீங்கும்.. தெரியுமா!

Published

on

வேம்பு பல மருத்துவ பலன்களைக் கொண்டது. வேப்பிலையை நீரில் கொதிக்க வைத்து சகாயமாக அருந்தலாம்; வேப்பங் கொழுந்தை அப்படியே மென்றும் சாப்பிடலாம்.
வேப்பிலை போட்டுக் கொதிக்க வைத்த நீரில் குளித்து வந்தால் சிரங்கு, நமைச்சல், புழுவெட்டு, சோரியாசிஸ் உள்படச் சரும நோய்கள் குணமாகும்.
இதிலுள்ள கசப்பு சுவை குடற்புழுக்களை வெளியேற்றும். மேலும், இது சிறந்த எதிர்ப்புச் சக்தியாகவும் செயலாற்றும். வேப்பிலையை அரைத்து, அதைத் தேய்த்துக் குளிப்பதன் மூலம், உடலில் உள்ள கிருமியை நீங்கும்.
தலைவலி, பித்த மயக்கம் பிரச்சனைகள் தீர, வேப்பிலையை எலுமிச்சை சாற்றில் சேர்த்து அரைத்து, தலைக்குத் தேய்த்துக் குளிக்கலாம்.
ஆறாத ரணம், புண்கள், கட்டி, வீக்கம் ஆகியவற்றில் வேப்பிலையை அரைத்துக் கட்டுப் போட்டால் விரைவில் குணமாகும்.
வேப்பம் பூவை உலர்த்தி தூளாக்கி வெந்நீரில் போட்டு உட்கொள்வதால் வாயுத்தொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப் புண் நீங்கும்.
முடி வளர்ச்சிக்குக் காரணமான உயிரணுக்களைத் தூண்டிவிட்டு கூந்தல் அடர்த்தியையும் அதிகரிக்கும். பார்வை திறனைப் பன்மடங்கு அதிகரிக்கும்.
seithichurul

Trending

Exit mobile version