தொழில்நுட்பம்

மே 15-க்கு பிறகு WhatsApp இயங்காதா? உண்மை என்ன?

Published

on

WhatsApp செயலியின் புதிய தனியுரிமைக் கொள்கையை நாம் ஏற்கவில்லை என்றால் மே-15-ம் தேதிக்கு பிறகு, WhatsApp செயலி இயங்காது என்று கூறப்படுகிறது. இது குறித்து WhatsApp-ன் அதிகாரப்பூர்வ இணையத்தில் ஆராய்ந்த போது பல விஷயங்கள் தெரிய வந்துள்ளது.

மே 15-க்கு பிறகு WhatsApp இயங்காதா?

WhatsApp-ன் புதிய தனியுரிமை கொள்கையை மே15-ம் தேதிக்குள் ஏற்கவில்லை என்றால் கணக்கு நீக்கப்படாது. வாட்ஸ்ஆப் செயலியின் சில அம்சங்களைப் பயன்படுத்த முடியாது.

மே-15-ம் தேதிக்கு பிறகு WhatsApp என்ன ஆகும்?

மே-15-ம் தேதிக்கு பிறகு WhatsApp செயலியை ஏற்குமாறு தொடர்ந்து அறிவிப்புகள் அனுப்பப்படும். குறிப்பிட்ட காலம் வரை அதை ஏற்காமலிருந்தாலும் சாட்டிங் தவிர போன் அழைப்பு மற்றும் வீடியோ கால் உள்ளிட்ட அழைப்புகளை மட்டும் செய்ய முடியும். பழைய சாட்டிங் தகவல்களையும் பார்க்க முடியாது.

தொடர்ந்து நாம் WhatsApp தனியுரிமைக் கொள்கையை ஏற்காமலிருந்தால் என்ன ஆகும்?

WhatsApp பல முறை தனியுரிமை கொள்கையை அனுப்பி, அதை நாம் ஏற்காமலிருந்தால் சில காலங்களுக்குப் பிறகு WhatsApp செயலியின் எந்த அம்சங்களையும் பயன்படுத்த முடியாது.

WhatsApp கணக்கு நீக்கப்படுமா?

உங்களுக்கு வாட்ஸ்ஆப் செயலி பயன்படுத்த விருப்பம் இல்லை என்றாலும், உங்கள் போனில் இருந்து வாட்ஸ்ஆப் செயலியை நீக்கினாலும் அதற்கான கணக்கு நீக்கப்படாது.

WhatsApp கணக்கை நிரந்தரமாக நீக்குவது எப்படி?

WhatsApp கணக்கை நிரந்தரமாக நீக்க பின்வரும் படிகளை பின்பற்ற வேண்டும்.

1) WhatsApp செயலியை திறக்க வேண்டும்.
2) More options-க்கு சென்று > Settings > Account > Delete my account என்பதை கிளிக் செய்யவும்.
3) சர்வதேச மொபைல் எண் போன்று உங்கள் முழு மொபைல் எண்ணை (+91 – 9XXXXXXXXX) உள்ளிட்டு, கணக்கை நீக்கு என்பதைத் தட்ட வேண்டும்.
4) பின்னர் எந்த காரணத்துக்காக இந்த செயலியிலிருந்து வெளியேறுகிறீர்கள் என்று குறிப்பிட வேண்டும்.
5) பின்னர் மீண்டும் ஒரு முறை எனது WhatsApp கணக்கை நீக்க வேண்டும் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

அதன் பிறகு உங்கள் போனில் WhatsApp செயலி இயங்காது. அதன் பிறகு தான் நமது போனில் இருந்து WhatsApp செயலியை நீக்க வேண்டும்.

மேலும் படிக்க: WhatsApp-ல் இனி நமது பிரைவஸி அவ்ளோதானா..?- சில வதந்திகளும் விளக்கங்களும்

 

Trending

Exit mobile version