தமிழ்நாடு

ஆக்சிஜன் அவசர தேவையா? உதவி எண்ணை அறிவித்த தமிழக அரசு

Published

on

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாகி வருவதும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் நோயாளிகளுக்கு செலுத்துவதற்கு ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளது என்பதும் தெரிந்ததே.

டெல்லி உள்பட பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாகவே நோயாளிகள் உயிரிழந்து கொண்டிருப்பதாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்தி பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தை பொருத்தவரை ஆக்சிஜன் பற்றாக்குறை என்பது தற்போதைக்கு இல்லை என்றாலும் கொரோனா நோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினமும் 13 ஆயிரத்தை தாண்டி உள்ள காரணத்தால் இன்னும் ஒரு சில வாரங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படலாம் என்று அஞ்சப்படுகிறது.

இந்த நிலையில் தமிழக அரசு சற்றுமுன் ஆக்சிஜன் தேவை என்றால் அழைக்கும்படி உதவி எண் ஒன்றை அறிவித்துள்ளது. இதன்படி ஆக்சிஜன் தேவை எனில் 104 என்ற எண்ணிற்கு அழைக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

மருத்துவமனைகள், நர்ஸிங் ஹோம்களில் வேறு ஏதேனும் சிக்கல் இருந்தாலும் 104 என்ற எண்ணை அழைத்து உதவி கேட்கலாம் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு தமிழகத்தில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் முக்கிய அறிவிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் தங்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் உடனடியாக 104 என்ற எண்ணை அழைத்து உதவி பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Trending

Exit mobile version