பர்சனல் ஃபினான்ஸ்

மாதம் ரூ.500 முதலீடு செய்தால் ரூ.10 லட்சம் சேமிக்க எவ்வளவு காலம் தேவைப்படும்?

Published

on

யாருக்குத்தான் லட்சாதிபதியாகப் பிடிக்காது? பலருக்கு லட்சம், கோடிகளில் பணத்தைச் சேமிக்க வேண்டும், முதலீடு செய்து லாபம் பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். நாம் இங்கு பிபிஎப், மியூச்சுவல் ஃபண்டு மற்றும் பிக்சட் டெபாசிட் போன்ற திட்டங்களில் மாதம் ரூ.500 முதலீடு செய்து 10 லட்சம் ரூபாய் சேமிக்க எவ்வளவும் காலம் பிடிக்கும் என விளக்கமாகத் தெரிந்துகொள்வோம்.

பிக்சட் டெபாசிட்

வங்கி பிக்சட் டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்தால் இப்போது 5 முதல் 8.5 சதவிகிதம் வரை லாபம் கிடைக்கிறது. பிக்சட் டெபாசிட் ஆண்டு வட்டி விகிதத்தை 7.5 சதவிகிதம் என வைத்துக்கொண்டால், 10 லட்சம் ரூபாய் சேமிக்க 34 வருடங்கள் வரை தேவைப்படும்.

பிபிஎஃப்

பொது வருங்கால வைப்பு நிதி என அழைக்கப்படும் பிபிஎஃப் திட்டத்தில் முதலீடு செய்தால் இப்போது 7.1 சதவிகிதம் வட்டி விகிதம் கிடைக்கிறது. இத்திட்டம் மூலமாக 10 லட்சம் ரூபாய் முதிர்வு தொகை பெற 37 வருடங்கள் வரை தேவைப்படும்.

மியூச்சிவல் ஃபண்டு

மியூச்சுவல் ஃபண்டு திட்டத்தில் எஸ்ஐபி கீழ் மாதம் 500 ரூபாய் முதலீடு செய்தால், ஆண்டுக்கு 12 சதவிகிதம் லாபம் கிடைக்கும் போது 26 வருடங்களில் அது 10 லட்சம் ரூபாயாக முதிர்வு பெறும்.

நாம் இந்த 500 ரூபாய் என்ற தொகையைக் கூட்டும் போது மேலும் விரைவாக 10 லட்சம் ரூபாய் முதிர்வு தொகை கிடைக்கும். எஸ்ஐபி திட்டம் கீழ் முதலீடு செய்யும் போது விரைவாக நாம் நமது இலக்கை அடைய முடியும்.

பொறுத்துத் துறப்பு:

இது நிதி ஆலோசனை அல்ல, எந்த முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன் வாசகர்கள் நிதி ஆலோசகருடன் கலந்தாலோசிக்க வேண்டும்.

Disclaimer:

This is not financial advice and that readers should consult with a financial advisor before making any investment decisions.

author avatar
Tamilarasu

Trending

Exit mobile version