இந்தியா

உங்களிடம் வாக்காளர் அட்டை இல்லையா? பரவாயில்லை இந்த 11 ஆவணங்களில் எதாவது ஒன்று இருந்தாலே போதும்

Published

on

எதிர் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி, தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தொடர்ந்து மே மாதம் 2 ஆம் தேதி, தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதையொட்டி இந்தியத் தேர்தல் ஆணையம், தமிழகத்தில் அனைவரும் வாக்குப் பதிவு செய்வதை உறுதி செய்ய பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அந்த வகையில் வாக்காளர் அடையாள அட்டை இல்லை என்றாலும் கூட கீழ்கண்ட அசல் ஆவணம் கையில் இருந்தால், வாக்குப் பதிவு நாளன்றைக்கு வாக்காளர் பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்குச் சென்று ஓட்டு போடலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வாக்காளர் அடையாள அட்டைக்கு மாற்றான ஆவணங்கள் பட்டியல்:

1. பாஸ்போர்ட்,

2. டிரைவிங் லைசன்ஸ்,

3. மத்திய-மாநில அரசுத்துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களால் வழங்கப்பட்ட பணியாளர் அடையாள அட்டை,

4. புகைப்படத்துடன் கூடிய தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் அஞ்சலக சேமிப்பு கணக்கு புத்தகம்,

5. பான்கார்டு,

6. தேசிய மக்கள் பதிவேடு அடையாள அட்டை,

7. தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அட்டை,

8. தொழிலாளர் நலத்துறை மூலம் வழங்கப்பட்ட காப்பீட்டு அட்டை,

9. புகைப் படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்,

10. சட்டசபை – நாடாளுமன்ற மாநிலங்கள் அவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட அலுவலர் அடையாள அட்டை,

11. ஆதார் அட்டை ஆகிய 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending

Exit mobile version