Connect with us

ஆரோக்கியம்

இந்த பாதிப்புகள் இருந்தால் இதயத்திற்கு ஆபத்து வரலாம்!

Published

on

இதயம் பாதிப்புகள்:

unhealthy

நம் உடலில் உள்ள மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்றான இதயம் இயல்பான முறையில் செயல்படாமல் ஆபத்தை எதிர்கொள்வதற்கு பல்வேறு விதமான காரணங்கள் உள்ளன. உலகெங்கிலும் இதயநோய் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் 18 மில்லியன் மக்கள் உயிரிழக்கின்றனர்.  இதய நோயால் உயிரிழக்கும் மொத்த மக்களில் 3ல் ஒரு பங்கு சதவீதத்தினர் 70 வயதுக்கு முன்பாக இளம் வயதிலேயே உயிரிழக்கின்றனர் என்று உலக சுகாதார நிலையம் தெரிவிக்கிறது.

* உயர் ரத்த அழுத்தம்
* கொலஸ்ட்ரால்
* நீரிழிவு நோய்
* உடல் பருமன்
* ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை பழக்கங்கள்

உயர் ரத்த அழுத்தம்: (hypertension)

hypertension

சில நேரங்களில் “தமனி வழி உயர் இரத்த அழுத்தம்”, தமனி / தமனிகளில் இரத்த அழுத்தம் உயர்த்தப்பெற்ற ஒரு நீடித்த(மருந்து) / நீடித்த நோய் / மருத்துவ நிலை ஆகும்.

அடிப்படை உயர் இரத்த அழுத்தம் / முதன்மை ( அடிப்படை ) உயர் இரத்த அழுத்தம் அல்லது இரண்டாம் நிலை உயர் இரத்த அழுத்தம் என்ற ஏதாவது ஒன்றில் உயர் இரத்த அழுத்தம் வகைப்படுத்தப்படுகிறது.

கிட்டத்தட்ட 1.28பில்லியின் பெரியவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் உள்ளது. உயர் ரத்த அழுத்தம் இருக்கும் ஒருவருக்கு மாரடைப்பு, இதய செயலிழப்பு, பக்கவாதம் மற்றும் பல சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது. இது ஒரு சைலன்ட் கில்லர்!

இதய தாக்கம், இதய தசைத் திசு இறப்பு (மாரடைப்பு),இதய செயலிழப்பு , தமனிகளின் குருதி நாள அழற்சி ( உ-ம்., பெருந்தமனி குருதி நாள அழற்சி ),வெளிப்புற தமனி நோய், மற்றும் நீடித்த சிறு நீரக நோய்க்கு ஒரு காரணம் ஆகியவற்றிற்குப் பிரதான அபாய காரணியாக உயர் இரத்த அழுத்தம் உள்ளது. தமனி வழி உயர் இரத்த அழுத்தத்தின் மிதமான உயர்வு கூட குறைவான ஆயுட்கால எதிர்பார்ப்புடன் தொடர்புடையது.

கொலஸ்ட்ரால்: (Cholesterol)

Cholesterol

கொலஸ்ட்ரால் என்பது நம் ரத்தத்தில் காணப்படும் ஒரு மெழுகுப் பொருளாகும். இது உடலில் பல முக்கிய பாத்திரங்களை வகிக்கிறது. இவற்றில் ஹார்மோன்கள் மற்றும் வைட்டமின் D ஆகியவை அடங்கும்.

நம் உடலில் கல்லீரல் உடலுக்குத் தேவையான கொழுப்பில் குறிப்பிட்ட அளவை மட்டுமே சுரக்கிறது. அன்றாடம் நாம் உண்ணும் உணவின் மூலமும் நம் உடலில் கொழுப்பு சேர்கிறது.

இது தமனிகள் வழியாக போதுமான ரத்தம் பாய்வதைக் கடினமாக்குகிறது. இந்த கொழுப்பு படிவுகள் திடீரென உடைந்து, கட்டிகளை உருக்காக்கி மாரடைப்பு அல்லது பக்கவாதத்திற்கு வழிவகுக்கும்.

இரத்தக் குழாய்கள் மற்றும் பிற உறுப்புகளில் படியும் கெட்ட கொழுப்புகள் இரத்த அழுத்தத்தை மிகைப்படுத்தி, இறுதியில் மாரடைப்பை உருவாக்கி இளவயதிலேயே இறப்பிற்கு வழிவகுக்கின்றன.

நீரிழிவு நோய்: (diabetes mellitus)

diabetes mellitus

ஒருவருடைய உடல் இன்சுலினை பலனளிக்கும் விதத்தில் பயன்படுத்தாதபோது அல்லது இன்சுலினை உற்பத்தி செய்ய இயலாதபோது ஏற்படுகிற நிலையே நீரிழிவு நோய். உடலில் இன்சுலின் அளவு குறையும்போது மற்றும்/அல்லது உடல் இன்சுலினை எதிர்க்கும்போது, இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம், அதிகப்படியான எல்டிஎல் கொழுப்பு (கெட்ட கொழுப்பு) மற்றும் உயர் ட்ரைகிளிசரைடுகள் உள்ளிட்ட பிற நிலைமைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் ஆகும்.

இன்சுலின் சமச்சீர் நிலையை இழப்பதால் இந்நிலை தோன்றுவதனால், இதனை உடல் சீர்குலைவுகளில் (physical disorder) ஒன்றாகக் கொள்ளலாம். மனித உடம்பில் சர்க்கரையை உடலுக்குத் தேவையான சக்தியாக மாற்ற இன்சுலின் அத்தியாவசியமாக உள்ளது.

கடுமையான நீண்ட காலச் சிக்கல்களாக இதயக் குழிய நோய், பக்கவாதம், நெடுநாள் சிறுநீரகக் கோளாறு, நீரிழிவு நோயினால் ஏற்படும் கால் புண், நீரிழிவு நோயினால் ஏற்படும் கண் நோய் என்பன ஏற்படலாம்.

உடல் பருமன்:(obesity)

obesity

கட்டுக்கு மீறிய வகையில் உடல் பெரிதாக சதைபோடுவதை உடற் பருமன் (obesity) அல்லது உடல் கொழுப்பு எனலாம். உடல் கொழுப்பு சேகரித்து வைப்பது உடல் இயக்கத்தின் சாதாரண ஓர் இயல்புதான், ஆனால் அதீதமாகக் கொழுப்பு சேருவது உடல் நலத்துக்கு ஆபத்தானது என்பதுடன் அது ஒரு நோயாகவும் அடையாளப்படுத்தப்பட்டது.

அதிகரித்த ரத்த அழுத்தம், களுக்கோஸ் மற்றும் லிப்பிட்கள் தவிர இதயம் சார்ந்த நோய்கள் ஏற்பட உருவாக்கும் அபாயத்திற்கு அதிக எடை மற்றும் உடல் பருமன் ஆகியவை பங்களிக்கின்றன.

35 வயதிற்கு மேற்பட்டவர்களிடையே உடல் பருமனாதல் அதிகம் காணப்படுகிறது. இதற்கு ஒரு காரணமாக உடலியக்க செயல்பாடுகள் குறைவதும், மற்றொரு காரணமாகச் சாப்பிடும் சாப்பாட்டின் அளவு குறையாமல் அதே அளவோ அல்லது அதற்கும் மேலே அதிகரிப்பதையும் கூறலாம். பொருளாதார வசதி கூடுவதாலும், உண்ணும் உணவின் அளவு அதிகரிக்கலாம்.

ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை பழக்கங்கள்: (Unhealthy lifestyle habits)

unhealthy lifestyle examples

சில நேரங்களில் நாம் நமக்கே தெரியாமல் செய்யும் சில சின்ன சின்ன விஷயங்கள் கூட நம் உடல் ஆரோக்கியத்தில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் ஆரோக்கியமாக வாழ நமக்கு ஒரு வாய்ப்பாக இருக்கின்றன.

இன்றைய நவீன உலகில் நம்மில் பெரும்பாலானோருக்கு இருக்கக் கூடிய முக்கிய பிரச்சனைகளில் ஒன்று சோம்பேறித்தனம். சோம்பல் உணர்வுடனே எப்போதும் இருப்பது உடல் ஆரோக்கியத்தை மட்டுமின்றி மன ஆரோக்கியத்திற்கும் தீமை தரக் கூடியது. நன்றாக இருக்கக் கூடிய அறிவாற்றல் திறனைக் கூட பலவீனப்படுத்தும் தன்மை கொண்டது சோம்பேறித்தனம். ஆரோக்கியமான உணவு முறை பழக்கத்தைப் பின்பற்றச் சோம்பேறித்தனம் பெரும் தடையாக இருப்பதால் நிறைய உடல்நல கோளாறுகள் ஏற்பட இது காரணமாக இருக்கிறது.

ஆரோக்கியமற்ற உணவு, எண்ணெய், பதப்படுத்தப்பட்ட மற்றும் சர்க்கரை உணவு, குறைவான உடல் செயல்பாடுகள், மனஅழுத்தம், புகைபிடித்தல் மற்றும் குடிப்பழக்கம் இதய ஆரோக்கியத்தைப் பாதிக்கின்றன.

வணிகம்53 நிமிடங்கள் ago

மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் மீண்டும் பணி நீக்கம்!

வணிகம்1 மணி நேரம் ago

வருமான வரி தாக்கலில் இருந்து இவர்களுக்கு மட்டும் விலக்கு! எப்படி?

தினபலன்4 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் (ஜூலை 19, 2024)

இந்தியா11 மணி நேரங்கள் ago

வேட்டி கட்டிய விவசாயிக்கு மால் அனுமதி மறுப்பு: ஒரு வார காலத்திற்கு மால் மூட உத்தரவு!

உலகம்12 மணி நேரங்கள் ago

உலகின் முதல் 10 பணக்கார நகரங்கள்: இந்தியாவில் எதுவும் இல்லை!

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

ஆடி மாத தேங்காய் சுடும் பண்டிகை: வரலாறு, காரணங்கள் மற்றும் முக்கியத்துவம்

இந்தியா13 மணி நேரங்கள் ago

மூளையை உண்ணும் அமீபா: கேரளாவில் இளைஞர் பலி! அறிகுறிகள் என்ன? தடுப்பு நடவடிக்கை என்னென்ன?

ஜோதிடம்13 மணி நேரங்கள் ago

சூரிய பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு பணம், பதவி யோகம்!

ஆரோக்கியம்13 மணி நேரங்கள் ago

காலையில் ஒரு சிட்டிகை உப்பு: அற்புதமான நன்மைகள்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்6 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளியின் சிறப்புக்கள் மற்றும் நன்மைகள்!

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

பல்சுவை6 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்4 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!