தமிழ்நாடு

“முருகன் தமிழ்க் கடவுள்னா, விநாயகர் யாருடா..?”- கொதி கொதித்த திருமா

Published

on

முருகன் தமிழ்க் கடவுள் என்று சொன்னால், அவரதோ சகோதரர் என்று சொல்லப்படும் விநாயகர் யார் என்று கேள்வி எழுப்பியுள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாளவன் எம்.பி.

சென்னையில் ‘திராவிடர் கழகம்’ சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட நிகழ்ச்சியில் பேசிய திருமா, ‘முருகனை தமிழ்க் கடவுள் என்று சொல்கிறார்கள். ஆனால், அவரின் சகோதரராக புராணங்களில் சொல்லப்படும் விநாயகரை மட்டும் யாரும் அப்படி சொல்வதில்லை. இருவரும் ஒரு அப்பன், அன்னைக்குப் பிறந்தவர்களாகத்தான் அறியப்படுகிறார்கள். அப்படி இருக்கையில் விநாயகரை நாமும் தமிழ்க் கடவுள் என்று சொல்ல மறுக்கிறோம். இந்துத்துவ வாதிகளும் சொல்வதில்லை. சகோதரர்கள் என்றால் இருவரும் தமிழர்களாகத்தான் இருக்க வேண்டும். இந்துத்துவவாதிகள், சனாதனிகள் தொடர்ந்து இப்படியான சூழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

நமது தமிழ் மண்ணின் சிறு தெய்வ மற்றும் குல தெய்வங்களையும் சனாதனிகள், மாற்றி வருகிறார்கள். அதையும் பெருந்தெய்வ வழிபாட்டு முறைகளுக்கு மாற்றி வருகிறார்கள். ஆனால் உண்மையில் நம் குலதெய்வங்களுக்கும் பெருந்தெய்வங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. ஆனால் சம்பந்தப்படுத்தப் பார்க்கிறார்கள்’ என்று ஆவசேமாக பேசினார்.

Trending

Exit mobile version