தமிழ்நாடு

உதயநிதியைப் பற்றி நான் பேசினால், ஸ்டாலினுக்கு பிபி அதிகமாகிறது: அமித்ஷா

Published

on

உதயநிதியை பற்றி நான் பேசினால் அவரது தந்தை ஸ்டாலினுக்கு பிபி அதிகமாகிறது என்று அமித்ஷா தேர்தல் பிரச்சார மேடை ஒன்றில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று மீண்டும் தமிழகத்துக்கு வருகை தந்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். இன்று காலை குஷ்புவுக்கு ஆதரவாக ஆயிரம் விளக்கு தொகுதியில் வாக்கு திரட்டிய அவர், தற்போது திருநெல்வேலியில் பிரச்சாரக் கூட்டமொன்றில் பேசி வருகிறார்.

இதில் அவர் பேசியபோது ’உதயநிதி பற்றி நான் பேசினால் ஸ்டாலினுக்கு பிபி அதிகமாகுது என்றும் அதன் பின்னர் அவர் தனது அமைதியை இழந்து யாரைப் பற்றியாவது அவதூறாக பேசி வருவதாகவும் கூறினார்.

இறந்த தலைவர்கள் குறித்து உதயநிதி, ஸ்டாலின் ஆகிய இருவரும் விமர்சனம் செய்கின்றனர் என்றும் அவர் குற்றம் சாட்டினார். அதிமுக பாஜக கூட்டணி தமிழகத்திற்காக பாடுபடுகிறது என்றும் ஆனால் திமுக காங்கிரஸ் கூட்டணி தங்களது குடும்பத்திற்காக பாடுபடுகிறது என்றும் அமைச்சர் அமித்ஷா கூறினார்.

மாநிலத்தை பெற்ற சிந்திப்பவர்களுக்கு உங்களது ஓட்டா? அல்லது மகனை பற்றி சிந்திப்பவர்களுக்கு உங்களது ஓட்டா? என மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார். ஒரு நாட்டின் ஜனாதிபதியாக தலித் ஒருவரை தேர்வு செய்தது பாஜக தான் என்றும் தலித் சமுதாயத்திற்கு பாஜக என்றென்றும் உறுதுணையாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

seithichurul

Trending

Exit mobile version