இந்தியா

ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் மாட்டிறைச்சிக்கு தடை: பாஜக சர்ச்சை பிரச்சாரம்!

Published

on

பாஜக மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்படும் என பாஜக வேட்பாளர் பெண் சாமியார் பிராக்யா சிங் தாக்கூர் தனது பிரச்சாரத்தில் கூறியுள்ளார். அதே நேரத்தில் மேலும் சில சர்ச்சை கருத்துக்களை அவர் கூறியுள்ளார்.

சமீபத்தில் புற்று நோய் பாதிப்பால் மரணமடைந்தார் கோவா முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கர். இவரது மரணத்தில் தற்போது சர்ச்சைக்குறிய கருத்து ஒன்றை கூறியுள்ளார் பிரக்யா சிங் தாக்கூர். இவர் அடிக்கடி சர்ச்சைக்குறிய வகையில் பேசி வருவது குறிப்பிடத்தக்கது.

பெண் சாமியாரான பிரக்யா சிங் தாக்கூர் மாலேகான் குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்டு தற்போது ஜாமீனில் உள்ளார். இவர் மத்திய பிரதேச மாநிலம் போபால் பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்கை எதிர்த்து பாஜக சார்பில் போட்டியிடுகிறார். இவர் நேற்று தனது தேர்தல் பிரச்சாரத்தில் மாட்டிறைச்சி இந்து மதத்திற்கு எதிரானது, அதை சாப்பிடுபவர்கள் இந்துக்களாக இருக்க மாட்டார்கள் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் நாடு முழுவதும் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்படும். கோவாவில் மாட்டிறைச்சிக்கு அனுமதி கொடுக்கப்பட்டதால் தான் அம்மாநில முதல்வராக இருந்த மனோகர் பரிக்கர் புற்றுநோய் வந்து உயிரிழந்தார், அவர் பசுவை மதிக்கவில்லை அதனால தான் அவர் அந்த தண்டனையை பெற்றார் என கூறி அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version