பல்சுவை

இட்லி பொடி மிகச் சுவையாகச் செய்வது எப்படி?

Published

on

வீட்டில் சுவையான இட்லி பொடி செய்வது எப்படி என்ற செய்முறை விளக்கம்.

தேவையான பொருள்கள்:

1. காய்ந்த மிளகாய் – 10nos
2. கடலை பருப்பு – 3ஸ்பூன்
3. உளுந்த பருப்பு – 3ஸ்பூன்
4. மிளகு – 1ஸ்பூன்
5. எள்ளு(வெள்ளை) – 1ஸ்பூன்
6. பெருங்காயம் – 1/4ஸ்பூன்
7. உப்பு – 1ஸ்பூன்
8. கருவேப்பிலை – கொத்து

செய்முறை:

• கடாயில் சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்து கடலை பருப்பு மற்றும் உளுந்த பருப்பு சிறிது சிவக்கும் வரை நன்கு வறுக்கவும்.
பிறகு அதே கடாயில் கறிவேப்பிலை மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து நன்கு வறுக்கவும்.

• அடுத்து மிளகு, எள்ளு(வெள்ளை) சேர்த்து வெடிக்கும் வரை வறுத்துக் கொள்ளவும்.

• வறுத்த அனைத்தும் ஒவ்வொன்றாகத் தட்டில் தட்டி நன்கு ஆற வைக்கவும்.

• நன்கு ஆறிய பிறகு அதை மிக்ஸி ஜாரில் எடுத்து, அத்துடன் உப்பு மற்றும் பெருங்காயம் சேர்த்து அனைத்து பொருட்களையும் அரைக்க வேண்டும்.

 

Trending

Exit mobile version