தமிழ்நாடு

இட்லி உண்ணும் போட்டி: முதல் பரிசை தட்டிச்சென்றவர் சாப்பிட்ட இட்லி எத்தனை தெரியுமா?

Published

on

ஈரோடு மாவட்டத்தில் இட்லி சாப்பிடும் ஒன்று போட்டி நடைபெற்ற நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெற்றவர் 19 இட்லிகளை சாப்பிட்டு சாதனை செய்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறை என்ற பகுதியில் இட்லி சாப்பிடும் போட்டி நடைபெற்றது. தனியார் கேட்டரிங் சார்பில் நடைபெற்ற இந்த இட்லி உண்ணும் போட்டியை நடிகர் வையாபுரி தொடங்கி வைத்தார்.

இந்த போட்டி 19 முதல் 30 வயது வரையில் ஒரு பிரிவும். 31 வயது முதல் 40 வயது வரை ஒரு பிரிவும் கலந்து கொண்டனர். இட்லிகளை மிகுந்த ஆர்வத்துடன் போட்டியாளர்கள் சாப்பிட்டனர் என்பதும் முதல் பத்து நிமிடத்தில் அதிகமான இட்லி சாப்பிடுபவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் 41 முதல் 50 வயது வரையிலான பிரிவில் பவானியை சேர்ந்த ராமலிங்கம் என்பவர் 19 இட்லிகளை சாப்பிட்டார். அதேபோல் 31 முதல் 40 வரையிலான பிரிவில் குமாரபாளையத்தில் சேர்ந்த ரவி என்பவர் 19 வெற்றிகள் சாப்பிட்டார். இருவருக்கும் பரிசுகள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பாஸ்ட்புட் கலாச்சாரத்தில் இருந்து பொதுமக்கள் இட்லிக்கு மாற வேண்டும் என்றும் இட்லி சாப்பிடுவதால் எந்த விதமான பிரச்சனையும் இருக்காது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த போட்டி நடத்தப்பட்டதாகவும் போட்டியை நடத்திய நிர்வாகிகள் தெரிவித்தனர்.

seithichurul

Trending

Exit mobile version