சினிமா செய்திகள்

கத்திரி வெயிலை தணிக்க ஐடியா சொல்லும் ஸ்ருஷ்டி டாங்கே!

Published

on

கத்திரி வெயில் என அழைக்கப்படும் அக்னி நட்சத்திரம் கடந்த மே 4ம் தேதி ஆரம்பமானது. இந்த மாதம் 28ம் தேதி வரை இதன் தாக்கம் சுட்டெரிக்க உள்ள நிலையில், கத்திரி வெயிலின் கதகதப்பை போக்க நடிகை ஸ்ருஷ்டி டாங்கே நீச்சல் குளத்தில் குளிக்கும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

மேகா, தர்மதுரை, டார்லிங், சத்ரு உள்ளிட்ட பல படங்களில் நாயகியாக நடித்துள்ள ஸ்ருஷ்டி டாங்கே வெளியிட்டுள்ள பிகினி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகின்றன.

புதிய படங்கள் ஏதும் இல்லாத நிலையில், நடிகைகள் வாய்ப்புத் தேட கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது போன்ற யுக்தியை ஸ்ருஷ்டி டாங்கேவும் கடைபிடிக்க ஆரம்பித்துவிட்டார் என அவரது புகைப்படத்திற்கு கீழே சிலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.

மேலும், சிலர் கத்திரி வெயிலின் கடுமையை சமாளிக்க இப்படி குளித்தால் தான் சரிபட்டு வரும் எனவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Trending

Exit mobile version