இந்தியா

ரூ.1200 வரை அபராதம்: ஐ.சி.ஐ.சிஐ வங்கி அறிவிப்பால் அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

Published

on

அதிகபட்சமாக 1,200 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என ஐசிஐசிஐ வங்கி அறிவித்துள்ளதால் அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஏற்கனவே செக் ரிட்டர்ன் உள்ளிட்டவைகளுக்கு கிட்டத்தட்ட 500 ரூபாய் அபராதம் ஐசிஐசிஐ வங்கியில் விதிக்கும் நிலையில் தற்போது கிரெடிட் கார்டு தொகை கட்டாமல் இருந்தால் குறைந்தபட்சமாக 100 ரூபாய் முதல் அதிகபட்சமாக 1,200 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என ஐசிஐசிஐ வங்கி தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐசிஐசிஐ வங்கி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

“அன்பார்ந்த வாடிக்கையாளரே, 10 – பிப்ரவரி – 2022 முதல் ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு சேவைகள் மீதான கட்டணம் மாற்றி அமைக்கப்படுகிறது. இதுகுறித்த மேலும் பல தகவல்களுக்கு வங்கியின் இணையதளத்தை பார்வையிட வேண்டும்’’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஐசிஐசிஐ வங்கி மாற்றப்பட்ட கட்டண விவரம்

டியூ தொகை ரூ.100 க்கு குறைவாக – எந்தவித கட்டணமும் கிடையாது.

டியூ தொகை ரூ.100 – ரூ.500 வரை – ரூ.100 தாமத கட்டணம்.

டியூ தொகை ரூ.501 – ரூ.5,000 வரை – ரூ.500 தாமத கட்டணம்.

டியூ தொகை ரூ.5,001 – ரூ.10,00 வரை – ரூ.750 தாமத கட்டணம்.

டியூ தொகை ரூ.10,001 – ரூ.25,000 வரை – ரூ.900 தாமத கட்டணம்.

டியூ தொகை ரூ.25,011 – ரூ.50,000 வரை – ரூ.1,000 தாமத கட்டணம்.

டியூ தொகை ரூ.50,000 வரை – ரூ.1,200 தாமத கட்டணம்.

இந்தத் தாமத கட்டணத்தோடு, வாடிக்கையாளரின் சேமிப்புக் கணக்கில் இருந்து பிளாட் சார்ஜ் ரூ.50 மற்றும் ஜிஎஸ்டி வரி வசூல் செய்யப்படும். , ஐசிஐசிஐ வங்கியின் எமரேல்ட் கிரெடிட் கார்டு பயன்படுத்துவோருக்கு இந்த கட்டண உயர்வு பொருந்தாது.

இவ்வாறு ஐசிஐசிஐ வங்கி தெரிவித்துள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version