உலகம்

ஐஸ் கிரீம் மூலமாக பரவும் கொரோனா! விஞ்ஞானிகள் அதிர்ச்சி!!

Published

on

சீனாவில் ஐஸ் கிரீம் மூலமாக கொரோனா வைரஸ் தொற்று பரவி வருவது உறுதிசெய்யப்பட்டுள்ளதால் சீன மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் இப்போது வரை தீர்ந்தபாடில்லை. புதிய வகை கொரோனாவாக உருமாறி மீண்டும் அச்சுறுத்தி வருகிறது. தற்போது உலக சுகாதார அமைப்பைச் சேர்ந்த மருத்துவ விஞ்ஞானிகள் கொரோனா உருவான விதத்தை கண்டறிந்து, உறுதிசெய்வதற்காக சீனாவுக்குச் சென்றுள்ளனர்.

இந்த நிலையில், சீனாவில் ஐஸ் கிரீமில் கொரோனா வைரஸ் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அங்கள்ள டியன்ஜின் பகுதியில் உள்ள பிரபல ஐஸ் கிரீம் தயாரிக்கும் தொழிற்சாலையில் தான் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்தத் தொழிற்சாலையில் ஐஸ் கிரீம் உற்பத்தி செய்வதற்குத் தேவையான மூலப்பொருட்கள், பால் பொருட்கள் நியூசிலாந்து மற்றும் உக்ரைனில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.

இதனால் கொரோனா எங்கிருந்து தோன்றியது என்பது தெரியவில்லை. இருப்பினும் டியன்ஜின் பகுதி ஐஸ் கிரீம் தொழிற்சாலையில் கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளதால், ஆலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும், அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. ஐஸ் கிரீமில் கொரோனா தொற்று இருப்பதால் சீன மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர். ஐஸ் கிரீம் சாப்பிடுவதை நிறுத்தி வருகின்றனர்.

Trending

Exit mobile version