கிரிக்கெட்

ஐசிசி-ன் சிறந்த ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணி: இந்திய வீரர்கள் ஆதிக்கம்!

Published

on

ஐசிசி எனப்படும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கடந்த 2018-ஆம் ஆண்டிற்கான சிறந்த கிரிக்கெட் அணியை அறிவித்துள்ளது. ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான சிறந்த கனவு அணியை தனித்தனியாக அறிவித்துள்ளது ஐசிசி. இதில் இந்திய வீரர்கள் அதிகம் இடம்பெற்றுள்ளனர்.

டெஸ்ட் போட்டிக்கான அணி: டாம் லாதம்(நியுசிலாந்து), டிமுத் கருனரத்னே(இலங்கை), கேன் வில்லியம்சன்(நியுசிலாந்து), விராட் கோலி(இந்தியா) (கேப்டன்), ஹென்றி நிக்கோல்ஸ்(நியுசிலாந்து), ரிஷப் பண்ட்(இந்தியா) (விக்கெட் கீப்பர்), ஜாசன் ஹோல்டர்(மே.இ.தீவுகள்), ககிசோ ரபாடா(தென்னாப்பிரிக்கா), நாதன் லயன்(ஆஸ்திரேலியா), ஜாஸ்ப்ரித் பும்ரா(இந்தியா), மொஹம்மத் அப்பாஸ்(பாகிஸ்தான்).

ஒருநாள் போட்டிக்கான அணி: ரோஹித் ஷர்மா(இந்தியா), ஜானி பெய்ர்ஸ்டோவ்(இங்கிலாந்து), விராட் கோலி(இந்தியா) (கேப்டன்), ஜோய் ரூட்(இங்கிலாந்து), ராஸ் டெய்லர்(நியுசிலாந்து), ஜாஸ் பட்லர்(இங்கிலாந்து) (விக்கெட் கீப்பர்), பென் ஸ்டோக்ஸ்(இங்கிலாந்து), முஸ்தாஃபிர் ரஹ்மான்(வங்கதேசம்), ரஷித் கான்(ஆஃப்கானிஸ்தான்), குல்தீப் யாதவ்(இந்தியா), ஜாஸ்ப்ரித் பும்ரா(இந்தியா).

இதில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் என இரண்டு வடிவ போட்டிக்கும் இந்தியாவின் விராட் கோலி கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் இரண்டு வடிவ போட்டிக்கும் தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் கோலி மற்றும் பும்ரா மட்டுமே.

seithichurul

Trending

Exit mobile version