கிரிக்கெட்

இந்த அடைமொழியை எல்லாம் பயன்படுத்தக் கூடாது… கிறிஸ் கெய்ல்-க்கு ஐசிசி கட்டுப்பாடு!

Published

on

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல் இனிமேல் தனது அடைமொழியான ‘யுனிவர்ஸ் பாஸ்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தக் கூடாது என ஐசிசி புதிதாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கான டி20 போட்டியில் அபாரமாக விளையாடி தனக்கு இன்னும் வயதாகவில்லை என்பதை நிரூபித்துள்ளார் 41 வயதான வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்ல். போட்டிக்குப் பின்னரான ஒரு நேர்காணலில் ஐசிசி தான் யுனிவர்ஸ் பாஸ் என்ற வார்த்தையைப் பிரயோகப்படுத்துவதை விரும்பவில்லை எனத் தெரிவித்திருந்தார்.

இந்த வீடியோ நேர்காணலும் சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் கிறிஸ் கெய்ல் கூறியிருப்பதாவது, “எனது பேட்-ல் ‘யுனிவர்ஸ் பாஸ்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதை ஐசிசி விரும்பவில்லை. அதனால் ‘தி பாஸ்’ எனப் போட்டுக் கொண்டேன். நான் இன்னும் மைதானத்தில் இறங்கினால் என்னைப் பார்க்க ரசிகர்கள் சந்தோஷப்படுகிறார்கள். இந்த யுனிவர்ஸ் பாஸ்-ஐ புரிந்து கொள்ளுங்கள்.

தி யுனிவர்ஸ் பாஸ் என்ற பெயருக்கு நான் தான் காப்புரிமை வாங்க வேண்டும் போல” எனக் குறிப்பிட்டிருந்தார். இதனால் உலகம் முழுவது உள்ள கெய்ல் ரசிகர்கள் தங்களது பாஸ் தற்போதைக்கு கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வ் பெறப்போவதில்லை என சந்தோஷத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version