கிரிக்கெட்

கிங்குடா.. டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் கோலி மீண்டும் முதலிடம்

Published

on

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடிய கோலி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.

இங்கிலாந்திற்கு எதிராக இந்திய அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. மேலும் டெஸ்ட் தொடரில் முதல் மற்றும் இரண்டு போட்டியில் மோசமாக தோல்வி அடைந்தது.

கோலி

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மிகவும் சிறப்பாக விளையாடியது.
இந்தியா இந்த போட்டியில் 203 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது.

இதில், கோலி ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். முதல் இன்னிங்சில் 97 இரண்டாவது இன்னிங்சில் சதம் அடித்தார்.

சிறப்பாக விளையாடிய கோலி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். 937 புள்ளிகளுடன் அவர் முதலிடத்தில் உள்ளார். ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் 929 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version