கிரிக்கெட்

செவ்வாய் கிரகத்தில் கிரிக்கெட் மைதானம்: ஐசிசி வெளியிட்டுள்ள அசத்தலான புகைப்படம்!

Published

on

உலகம் முழுவதும் கிரிக்கெட்டிற்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது என்பதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் கிரிக்கெட்டிற்கு ஆதரவளித்து வருகின்றனர் என்பதும் தெரிந்ததே.

ஒவ்வொரு போட்டியும் தொடக்கம் முதல் முடியும் வரை கண்கொட்டாமல் பார்க்கும் ரசிகர்கள் இருக்கும் வரை கிரிக்கெட்டிற்கு என்றுமே அழிவில்லை என்பதுதான் உண்மையான தாக உள்ளது.

இந்த நிலையில் இந்த பூமியில் மட்டுமின்றி செவ்வாய் கிரகத்திலும் கிரிக்கெட் மைதானத்தை அமைக்க இருப்பதாக காமெடியுடன் கூடிய ஒரு புகைப்படத்தை ஐசிசி வெளியிட்டுள்ளது. கிரிக்கெட் என்பது எப்போதுமே இந்த உலகத்தையும் தாண்டியது என்று நாங்கள் அடிக்கடி கூறி வருவோம். அந்த வகையில் நாசாவின் உதவியுடன் செவ்வாய் கிரகத்திலும் கிரிக்கெட் மைதானம் அமைப்போம் என்று கூறி செவ்வாய் கிரகத்தில் கிரிக்கெட் மைதானம் இருப்பது போன்று ஃபோட்டோஷாப் செய்யப்பட்ட புகைப்படம் ஒன்றை ஐசிசி வெளியிட்டுள்ளது.

மேலும் முதல் போட்டியில் யார் டாஸ் வின் செய்வார்கள் என்பதை யூகித்து கொள்ளுங்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளது. செவ்வாய் கிரகத்திற்கு சமீபத்தில் நாசா அனுப்பிய பெர்சிவரன்ஸ் என்ற விண்கலம் வெற்றிகரமாக தரை இறங்கிய நிலையில் அந்த விண்கலத்துடன் கிரிக்கெட் மைதானம் அமைந்திருப்பது போன்ற ஐசிசி வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Trending

Exit mobile version