கிரிக்கெட்

உலகக் கோப்பைக்கு பின்னர் ஐசிசி தரவரிசைப்பட்டியல்: விராட் கோலி முதலிடம்!

Published

on

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்துள்ள நிலையில் ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசைப்பட்டியலை வெளியிட்டுள்ளது ஐசிசி. இதில் இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டிங்கில் முதலிடத்தில் உள்ளார்.

உலகக் கோப்பையை முதன்முறையாக கைப்பற்றிய இங்கிலாந்து அணி தரவரிசையில் 125 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இந்திய அணி 122 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், 112 புள்ளிகளுடன் நியூசிலாந்து அணி மூன்றாம் இடத்திலும், 111 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா அணி நான்காம் இடத்திலும், 110 புள்ளிகளுடன் தென்னாப்பிரிக்கா அணி ஐந்தாம் இடத்திலும் உள்ளது.

பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி 886 புள்ளிகளுடன் முதலிடத்திலும், துணை கேப்டன் ரோஹித் ஷர்மா 885 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளனர். பாகிஸ்தானின் பாபர் அசாம், தென்னாப்பிரிக்காவின் டூ ப்ளஸிஸ், நியூசிலாந்தின் ரோஸ் டெய்லர் மற்றும் கேன் வில்லியம்சன், ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

பந்து வீச்சாளர்கள் தரவரிசையில், இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜாஸ்ப்ரீத் பும்ரா 809 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். நியூசிலாந்தின் டிரெண்ட் போல்ட் 740 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். தென்னாப்ரிக்காவின் ரபாடா, ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

ஆல்ரவுண்டர் தரவரிசையில் வங்கதேசத்தின் ஷகிப் அல் ஹாசன் முதலிடத்தில் உள்ளார். இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா பத்தாவது இடத்தில் உள்ளார்.

Trending

Exit mobile version