இந்தியா

தோனியின் கிளவுஸ் முத்திரை சர்ச்சை: அகற்றுமாறு ஐசிசி வலியுறுத்தல்!

Published

on

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணியை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி வெற்றிபெற்றாலும் இந்த போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தோனி அணிந்திருந்த கிளவுஸ் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இந்த போட்டியில் தோனி அணிந்திருந்த கிளவுஸ்சில் முத்திரை ஒன்று இடம்பிடித்துள்ளது. இது இந்திய துணை ராணுவச் சிறப்புப் படையின் முத்திரை ஆகும். இதன் அர்த்தம் தியாகம் என்பதாகும். இந்த முத்திரையை அணியத் துணை ராணுவ கமாண்டோக்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு. தோனிக்கு கடந்த 2011-ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தில் கௌரவ லெப்டினன்ட் பதவி அளிக்கப்பட்டதால் அவரும் இந்த முத்திரையைப் பயன்படுத்தலாம். 2015-ஆம் ஆண்டு துணை ராணுவப் பிரிவில் தோனி பயிற்சியும் மேற்கொண்டுள்ளார்.

இருப்பினும் ராணுவ முத்திரை கொண்ட கிளவுஸ்ஸை தோனி பயன்படுத்த வேண்டாம் என ஐசிசி இந்திய கிரிக்கெட் வாரியத்தை வலியுறுத்தியுள்ளது. ஐசிசி விதிகளின்படி ஐசிசி உபகரணங்கள் மற்றும் ஆடை ஆகியவற்றில் அரசியல், சமய, இனவாத அல்லது தேசியவாத முத்திரைகள் அல்லது குறியீடுகள் ஆகியவற்றைப் பயன்படுத்த அனுமதி இல்லை. இதன் காரணமாக தோனி ராணுவ முத்திரை பதித்த கிளவுஸ்ஸை அணியக்கூடாது என ஐசிசி இந்திய கிரிக்கெட் வாரியத்தை வலியுறுத்தியுள்ளது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version