Connect with us

உலகம்

கூகுள், மைக்ரோசாப்ட்-ஐ அடுத்து ஐபிஎம்… ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வேலைநீக்கம்!

Published

on

உலகம் முழுவதும் தலைவிரித்தாடும் பொருளாதார மந்த நிலை காரணமாக பல முன்னணி ஐடி நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான ஊழியர்களை வேலை நீக்கம் செய்து வரும் நிலையில் அந்த பட்டியலில் தற்போது ஐபிஎம் நிறுவனமும் இணைந்துள்ளதால் அந்நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பொருளாதார மந்த நிலை, பணவீக்கம் மற்றும் வட்டி உயர்வு காரணமாக ஐடி நிறுவனங்களுக்கான வருவாய் குறைந்து விட்டதாகவும் இதனை அடுத்து நஷ்டத்தை தவிர்க்க பல நிறுவனங்கள் வேலை நீக்க நடவடிக்கை எடுத்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

அமேசான், மைக்ரோசாப்ட், பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட பல நிறுவனங்கள் தங்களுடைய ஆயிரக்கணக்கான ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பி உள்ள நிலையில் தற்போது உலகின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான ஐபிஎம் 3900 ஊழியர்களை வேலை நீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

#image_title

ஐபிஎல் நிறுவனத்தின் துணை நிறுவனமான Kyndryl மற்றும் Watson Health நிறுவனங்களில் அதிக அளவு ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதுமட்டுமின்றி 2022 ஆம் ஆண்டுக்கான இலக்கை தவறவிட்ட நிலையில் சிக்கன நடவடிக்கையாக வேலை நீக்க நடவடிக்கை மட்டும் இன்றி இந்நிறுவனத்துக்கு சொந்தமான சில சொத்துக்களையும் விற்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

2023 ஆம் ஆண்டு ஆரம்பத்திலேயே பொருளாதார மந்த நிலை உச்சத்தை சென்றுள்ளதை அடுத்து நிறுவனத்திற்கு கிடைக்கும் முதலீடுகள் குறைந்துள்ளதாகவும் இதனை அடுத்து செலவுகளை குறைத்து நிதி நிலையை காப்பாற்றுவதற்காக ஆட்குறைப்பு மற்றும் சொத்துக்களை விற்க முடிவு செய்து கொள்வதாகவும் ஐபிஎல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொழிலாளர்கள் மீது கவனம் செலுத்துவதற்கும் நிறுவனத்தின் பராமரிப்பு செலவிற்கும் ஆண்டுக்கு 300 மில்லியன் டாலர் செலவாகும் என்றும் ஐபிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த இரண்டரை ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான நபர்களை பணி அமர்த்தியதால் கூடுதல் செலவு ஏற்பட்டு உள்ளதாக கூறும் ஐபிஎம் நிறுவனம் இனி வருங்காலத்தில் டிஜிட்டல் மயமாக்கல், AI ஆட்டோமேஷன் ஆகியவற்றை மேம்படுத்த உள்ளதாகவும் வாடிக்கையாளர்களை முழு திருப்தி செய்ய நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என்றும் ஐபிஎம் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி அதிகாரி ஜேம்ஸ் கவானாக்அவர்கள் கூறியுள்ளார்.

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்15 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் (05/10/2024)

வணிகம்2 நாட்கள் ago

2024-ம் ஆண்டு இந்தியாவின் மிகப்பெரிய 10 மாநிலங்கள்

வணிகம்2 நாட்கள் ago

2025-ம் ஆண்டு இந்தியர்களின் சம்பளம் சராசரியாக 9.5% வரை உயரும்! வெளியான முக்கிய ஆய்வு அறிக்கை!

தினபலன்3 நாட்கள் ago

இன்றைய (03/10/2024) ராசிபலன்கள்

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்4 நாட்கள் ago

இன்றைய (02/10/2024) ராசிபலன்

தனியார் வேலைவாய்ப்பு4 நாட்கள் ago

Infosys இல் Opentext VIM Developer பணிக்கு அழைப்பு!

ஆரோக்கியம்4 நாட்கள் ago

புற்றுநோயின் ஆரம்பகால அறிகுறிகள்: உடல் சோர்வு முதல் தலைவலி வரை!

வேலைவாய்ப்பு4 நாட்கள் ago

HAL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்4 நாட்கள் ago

புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாள் அருள் பெறும் வழிபாடு!

ஜோதிடம்4 நாட்கள் ago

மகாளய அமாவாசை 2024: முன்னோர்களுக்கு நன்றி செலுத்தும் திருநாள்!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

ரூ.42,000/- சம்பளத்தில் TANUVAS பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

வணிகம்7 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (29/09/2024)!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (30/09/2024)

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்7 நாட்கள் ago

அக்டோபர் 1 முதல் 15 வரை இருவார ராசிபலன்: 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

ஆரோக்கியம்6 நாட்கள் ago

சுவையான சிக்கன் கட்லெட்.. ஒருமுறை இப்படி செஞ்சு பாருங்க!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

BEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

நாஞ்சில் நாட்டு மீன் குழம்பு செய்வது எப்படி?

ஆரோக்கியம்7 நாட்கள் ago

மதுரையின் பிரசித்தி பெற்ற முனியாண்டி விலாஸ் சிக்கன் குழம்பு செய்யலாம் வாங்க!

ஜோதிடம்5 நாட்கள் ago

சூரிய கிரகணம் 2024: இந்த ராசிகளுக்கு எச்சரிக்கை!

தினபலன்7 நாட்கள் ago

செப்டம்பர் 29 – இன்றைய ராசி பலன்கள்!