இந்தியா

இரவு உணவு சாப்பிட்டு கொண்டிருந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி திடீர் மரணம்.. மர்ம மரணம் என வழக்குப்பதிவு..!

Published

on

தனது சகாக்களுடன் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் திடீரென மரணம் அடைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் பொதுப்பணி துறையில் செயலாளராக பணிகள் இருப்பவர் 57 வயது ஐஏஎஸ் அதிகாரி பிரசாந்த் தத்தாத்ரே. இவர் மும்பை சிஸ்டியில் உள்ள கலா கோடா என்ற பகுதியில் வசித்து வந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள உணவகத்திற்கு தனது இரண்டு சகாக்களுடன் சென்றுள்ளார்.

இந்த நிலையில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது திடீரென அவர் மயங்கி விழுந்து மரணம் அடைந்ததாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஐஏஎஸ் அதிகாரி பிரசாந்த் தத்தாத்தரே தனது சக ஊழியர்களுடன் வெளியே சென்றதாக போலீசாரின் முதல் கட்ட விசாரணைகள் தெரிய வந்தது.

முதலில் அவர் இரண்டு சகாக்களுடன் பேட்மிட்டன் விளையாட சென்றார் என்றும் அதன் பிறகு அவர் தனது குடியிருப்புக்கு வந்து தனது துறையின் செயலர் மற்றும் துணைச் செயலாளர் ஆகிய இருவருடன் இரவு உணவிற்காக வெளியே சென்றார் என்றும் கூறப்படுகிறது.

உணவகத்தின் சிசிடிவி கட்சியின்படி மூவரும் 7.55 மணிக்கு உணவகத்திற்கு சென்று உள்ளனர். அதன் பிறகு அவர்கள் 8.52 மணிக்கு உணவு சாப்பிட்டு முடித்த நிலையில் திடீரென பிரசாந்த் தத்தாத்ரே மயக்கம் அடைந்துள்ளதாக அந்த சிசிடிவி கட்சியின் மூலம் தெரிய வருகிறது. அவருடன் சென்ற இரண்டு சக ஊழியர்கள் உடனடியாக டாக்ஸியில் மும்பை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.

அவருடைய மரணத்தை மர்மமான மரணம் என வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருக்கிறோம் என்றும் அதன் பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளனர். இந்த நிலையில் மறைந்த பிரசாந்த் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அவரது இறுதிச் சடங்கிற்காக விமான மூலம் நாக்பூருக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version