இந்தியா

திட்டமிட்டபடி நாளை தொடங்குகிறதா ஐ.ஏ.எஸ், ஐபிஎஸ் தேர்வுகள்? யூ.பி.எஸ்.சி விளக்கம்

Published

on

கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு தமிழகம் உள்பட இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் அதிகரித்து வருகிறது என்பதும் அதனால் தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு உத்தரவு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் ஒமிக்ரான் பரவல் காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பதும், தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் நாளை நடைபெற திட்டமிடப்பட்டிருந்த ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படவில்லை என்றும் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் யூ.பி.எஸ்.சி விளக்கம் அளித்துள்ளது.

ஐ.ஏ.எஸ், ஐபிஎஸ், ஐ.எஃப்.எஸ் உள்ளிட்ட பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வு திட்டமிட்டபடி ஜனவரி 7, 8, 9 மற்றும் ஜனவரி 15, 16 ஆகிய தேதிகளில் தேர்வுகள் நடைபெறும் அதில் எந்தவித மாற்றமும் இல்லை என்றும் யுபிஎஸ்சி திட்டவட்டமாக கூறியுள்ளது.

மேலும் ஐ.ஏ.எஸ், ஐபிஎஸ், தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்களுக்கு இன்று முதல் தேர்வு முடியும் வரை தேவையான போக்குவரத்து சேவைகள் மற்றும் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதிப்படுத்துமாறு அனைத்து மாநிலங்களுக்கும் யூபிஎஸ்சி அறிவுறுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.ஏ.எஸ், ஐபிஎஸ், தேர்வுகள் எழுத வரும் விண்ணப்பதாரர்கள் கொரனோ வைரஸ் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் மாஸ்க் அணிந்து தனிமனித இடைவெளிகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் யுபிஎஸ்சி அறிவுறுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version