தமிழ்நாடு

ஐ.ஏ.எஸ் தேர்வில் தமிழக மாணவர்களின் தேர்ச்சி மிக குறைவு: என்ன காரணம்?

Published

on

 கடந்த ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஐ.ஏ.எஸ் தேர்வுகளில் தமிழக தேர்வர்களின் தேர்ச்சி மிகவும் குறைவாக இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
ஐ.ஏ.எஸ் தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில் மத்திய மத்தியப் பணியாளர் தேர்வாணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட 685 பேர்களில் 207 பேர்கள் மட்டுமே தமிழகத்தில் இருந்து தேர்ச்சி பெற்றிருந்தனர்.
கடந்த 2004ஆம் ஆண்டு மொத்த தேர்ச்சியில் 10 சதவீதமாக இருந்த தமிழக தேர்வர்களின் தேர்ச்சி படிப்படியாக குறைந்து 2017ஆம் ஆண்டு 4 சதவீதமாகவும், 2020 ஆம் ஆண்டு 4.7 சதவீதமாகவும் இந்த ஆண்டு 3.94 சதவீதமாகவும் தேர்ச்சி விகிதம் குறைந்து கொண்டே வருகிறது.
சிவில் சர்வீஸ் தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்படுவதால் தான் தமிழக மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்து வருவதாகவும் அதுமட்டுமின்றி சரியான பயிற்சியும் தமிழக மாணவர்களுக்கு கிடைக்கவில்லை என்றும் தேர்வு சதவீதம் குறைந்ததற்கு காரணமாக கூறப்படுகிறது.
எனவே ஐஏஎஸ் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களை தயார்படுத்தும் வகையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
seithichurul

Trending

Exit mobile version